''என்னை பணயக் கைதியாக வைத்து காரியங்களைச் சாதிக்காதீர்கள்'' - ரவூப் ஹக்கீம்
டாக்டர் ஹபீஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 01.08.2012 புதன் கிழமை மாலை அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை
நேர்மையான ஆட்சி, முஸ்லிம் காங்கிரஸிக்கான அரசியல் அதிகாரம், அதற்கான உத்தரவாதம், முஸ்லிம் சமூகத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலம் பற்றிய தெளிவு என்பன தேவை. அரபு வசந்தம் அரபுலகில் குறிப்பாக எகிப்திலும் டூனேசியாவிலும் எதனை எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இந்தக் கிழக்கு மண்ணிலும் முஸ்லிம்களின் அரசியல் பிரபாகம் ஆரம்பமாகப் போகின்றது. அத்தகைய சூழ்நிலையில்தான் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தில் எழுச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்பதனால் தடுமாறிப்போய்யிருக்கின்ற சிலர் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டு இருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபடநாடகம் ஆடி தனியாகப் போட்டியிடுவதற்கு களமிறங்கியிருப்பதாக ஒருவர் உளருகிறார். ஊங்களுக்குப் பக்கத்து ஊரிலுள்ள ஒருவர் இதனைச் சொல்ல, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்னொன்றைச் சொல்கின்றார். மஹிந்த ராஜபக்சவோடு நான் ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை அவருக்கு திரட்டிக்கொடுப்பதற்காக நாங்கள் தனித்துப்போட்டியிடுவதாக கூறுகின்றார். ஜனாதிபதிக்கு ஆதரவளித்து நான முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளப்போகிறேன் என அவர் கூறுகிறார். ஆவர்களுக்கு நான் பதில் கூறுவதற்கு அவர்கள் அறவே அருகதையற்றவர்கள்.
புடித்த மக்கள் நிறைந்த அக்கறைப்பற்றில் அந்த நபர் இவ்வாறான கதைகளை கட்டவிழ்ப்பதால் அவர்கள் அவற்றை ஒரு போதும் நம்பப் போவதில்லை இன்று அக்கரைப்பற்றில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
புள்ளிவாசல் சம்மேளனத்தைக் கூட்டி அவர் சொன்ன படி செய்யச்சொன்னதை தம்பி தவம் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்டு தலைகீழாக மாற்றியுள்ளார. முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை அங்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் மிகப்பெறிய மாற்றத்தை இந்தப் பிரதேசத்தில் கொண்டு வரப்போகின்றது. இது எந்த ஒரு தனிமனிதனுடையதும் கட்சியல்ல அமைச்சுப் பதவி வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்குகின்றார்கள். முழு அமைச்சுப் பதவி வேண்டுமென்றால் ஒரு கட்சி தேவை என்று எண்ணுகின்றார்கள்.
பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு 2000 ஆண்டிலிருந்து இந்த தலைமைத்துவத்திற்கான போட்டி ஆரம்பித்து விட்டது. அதே நிலைமையை இந்த தேர்தலின் பின்னும் தொடரலாமா என சிலர் நினைக்கின்றார்கள்.
இந்த அரசியல் இயக்கம் தன்னோடு இணைந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி விரும்பிய போது அவர் சொன்னதல்லாம் தனி மனிதர்களை தான் பரித்தெடுத்தாலும், மக்கள் அவர்களோடு வர மாட்டார்கள் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸோடுதான் இருப்பார்கள் என்பதாகும். ஜனாதிபதியின் பட்டறிவு அவருக்கு அதனை உணர்த்தியது. இந்த தேர்தலுக்கு பின்னரான நிலைமையில் கட்சியை எவராவது தங்களுக்கு வேண்டியவாறு கையாள நினைத்தால் விளைவு விபரிதமாகி விடும்.
அடுத்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். ஆதை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது. கட்சிக்குள்ள மக்கள் ஆணையோடுதான் விசயங்களைச் சாதிக்கலாம்.
இந்த இயக்கமும், இந்த இயக்கத்தின் போராளிகளும் இந்தக் கட்சியை எவரும் ஓர் இழிவான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கு அறவே இடமளிக்கமாட்டார்கள். தார்மீகமாக நடந்து கொள்பவர்கள் யார் என்பதை இந்த தேர்தலோடு மக்கள் உணர்ந்து கொள்வார்கள். கட்சிக்கான பணியை யாராவது சரியாக நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் அதனை உணரத்தான் போகின்றார்கள்.
இது சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் பணி இதை யாரிடத்திலும், எந்த சக்தியிடத்திலும் அடகு வைத்து விட்டு இந்தக் கட்சியோடு யாரும் விளையாட முடியாது. இதனை கட்சிக்குள்ளும், வெளியிலும் உள்ள எல்லோரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது மிகவும் நெருக்கடியான கால கட்டம். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய தேவையில்லை என நினைக்கின்றேன். தலைவரை விடவும் கட்சிப் போராளிகள் நிலைமைகளை நுணுக்கமாக நோக்குகின்றனர். கட்சியில் கரிசனையுள்ள அவ்வாறன பலர் உங்கள் மத்தியிலும் இருக்கின்றீர்கள். இந்த மேடையிலும் இருக்கின்றார்கள்.
பதவிகளுக்காக சோரம் போபவர்களாக எங்களை வெளியிலுள்ள பலர் பார்க்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு பதவிகளுக்கு சோரம் போபவர்களாக இருந்தால், என்ன வந்தாலும் பரவாயில்லை என்று அரசாங்கத்தோடு இரண்டரக் கலந்து வெற்றிலைச் சின்னத்தில் சங்கமாகியிருக்கலாம்.
அண்மையி இங்கு பிரதேச சபைத் தேர்தல் நடந்த போதும் மிகத் திடகாத்திரமாகச் சொன்னோம். விட்டுக்கொடுப்பிற்கும் ஓர் எல்லையுன்டு.
நாங்கள் இறுதி முடிவை மேற்கொள்ளும் போது ஜனாதிபதி இருக்கவில்லை. ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தடுமாற்றத்தோடு எதையோ சொன்னார் ஆனால் நிக்கயமக ஜனாதிபதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நேர்மையை சரிவர ஜீரணிக்கின்ற அளவிற்கு நாங்கள் அவருடன் பேசியிருக்கின்றோம்.
இதற்கு மேலும் அவருடன் சென்று பேசி முஸ்லிம் காங்கிரஸின் தன்மானம், சுயகௌரவம் மக்கள் பணி இவற்றயெல்லாம் பறிகுடுத்து விட முடியாது. மிகவும் பக்குவமாக இந்த விடயங்களை கையாள வேண்டியுள்ளது.
இந்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக கட்சிப்பிரதிநிதிகளை பொத்திவிலுக்கு அழைத்து கலந்துரையாடினேன். ஏந்த அடிப்பமையில் இந்த தேர்தலை சந்திப்பதென்ற விடயங்களை விரிவாக ஆராய்ந்தோம்.
ஆனால் தற்பொழுது அரசாங்கத்தோடு நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகளின் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானம் எடுத்ததன் பிறகு அடுத்த கட்டமாக வெற்றி பெற்று இந்த சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற முறையில் அந்தஸ்தோடு மாகாண சபையில் அமர வேண்டும். அதற்கு பல்வேறு மாறுபட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றை எல்லாம் இந்தக் கூட்டத்தில் சொல்லிவிட முடியாது.
ஆனால் அடிக்கடி பத்திரிகைகளில் கட்சியின் பிரதானிகள் வௌவேறு விதமாக கருத்துக்களைக் கூறுகின்றார்கள். ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பகளுக்கு ஏற்ப இந்தக் கட்சியை கொண்டு செல்ல முடியாது. இந்தக் கட்சி வெற்றி பற்றி பேச வேண்டும். வெற்றியின் பின்னரான நிலைமை பற்றி மக்கள் தந்த பதவிகளில் இருப்பவர்கள் அந்தப் பதவிகளின் தார்மீகப் பொறுப்பு என்ன என்பதை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
தேர்தலின் பின்பு நாங்கள் இன்னும எப்படி பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என்பது அரசியல்வாதிகளின் இயல்பான குணம், ஆனால் கட்சி எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற பாணியில் கபடத்தனமாகவும், நயவஞ்சகத்தனமாகவும் நடந்துக் கொள்ளக் கூடாது.
நாங்களாகவே எங்களது கட்சியை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் அரங்கேறியுள்ளன. ஆனால் இந்த இயக்கத்திற்கு மக்களிடத்திலள்ள பேரபிமானத்தின் காரணமாக அவர்களிடம் சென்று இந்த கட்சியை தோற்கடியுங்கள் என்று சொல்ல முடியாத நிலையிலிருக்கிறார்கள். இந்தக் கட்சியின் மரச்சின்னத்தின் மீதுள்ள பற்றை வைத்துத்தான் அவர்கள் அர்ப்பணிப்புடன் கட்சியை கட்டிக்காக்கின்றார்கள்.
இந்த பந்தயத்தில், சதுரங்க ஆட்டத்தில் கட்சியின் சின்னத்தை மக்கள் மனங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. ஏந்த கபட நாடகத்தை ஆடினாலும் அது கைகூடாது. ஆதற்காக கடசி வேலைகளை களமிறங்கி நடத்துவதுதான் தலைவரான எனக்கு எஞ்சியிருக்கும் பணியாகும்.
ஏல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த கிழக்கு மண்ணிலே பத்தாயிரம் பேருக்கும் அதிகமான ஒர் ஆளணியை திரட்டியாக வேண்டும். இந்தக்கட்சின் செல்வாக்கையும், பலத்தையும் எல்லாத தரப்பினருக்கும் புரிய வைக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்சியை பாதுகாக்கின்ற பணி இறைவன் அருளால் கட்சிப் போராளிகளில் தங்கியிருக்கின்றது.
இதனை எந்தவிதமான ஊடுருவல்களும் பிரித்திவிட முடியாது.
அக்கரைப்பற்றில் மூன்று வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கின்றோம். பொதுவாக வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் தலைவர் பட்ட கஷ்தம் நேரில் வந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
இந்தக் கட்சியின் அரசியல் பலம் இந்த அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல முழுக்கிழக்கிலங்கையிலும், நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் எல்லா இடங்களுக்கும் பங்கிட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அட்டாளைச்சேனை என்ற இந்த கட்சியின் கோட்டையாக தகழுகின்ற மண்ணில் ஒரு திருப்பு முணையாய் இந்த தேர்தலை நாம் நோக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் விடுக்கின்றேன். கட்சியின் தலைவரை பணயக் கைதியாக வைத்து காரியங்களைச் சாதிக்கும் மனநிலை மாற வேண்டும். நான் இந்த முட்கிரீடத்தை பயந்து அஞ்சி தலையில் சுமந்தவன் அல்ல சவால்களுக்கு முகம் கொடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறி,மாறி தேர்தல் போட்டியிட்டு சமூகத்தின் ஒட்டு மொத்த நன்மையை நோக்கமாகக் கொண்டு வெற்றி பெற்றவன் .
எந்தவிதமான குள்ளநரித்தனமும் இம்முறை எடுபடாது சகோதரர் அவர்களே! வெற்றி நமதே!...
ReplyDeleteஅட்டாளைச்சேனை,சாய்ந்தமருது,பொத்துவில்,கல்முனை,
மருதமுனை,சம்மாந்துறை,அக்கரைப்பற்று,ஓட்டமாவடி,ஏறாவூர்,
வாழைச்சேனை,மூதூர்,கிண்ணியா எல்லாம் நமது கோட்டை....
unkalathu athikaara pankeedu pannirandu varusam paaththam nallaa pankitteenka innum pala mahilaal silva, therar. innumpala perumpaanmai sahothararkal iruppaanka kandiyila illaatti colombila thedi pudichchi innum irukkira meethi athikaaraththai pankidunka katchiya melum nallaa valakkellaam. therthalukku mattum nallaa stpanni pesa palahikitteenka. unkada kaalam paravayilla aana marhoom ashroff ippidi athikaaraththa mulumaya surattalla.antha manisan neethi niyayamaa nadaththaatti kaattiru peiththar manisan. nanri
ReplyDeleteHi,dear Jaffna Muslim editors,i Can't reading well your web site news because,many spelling mistake continues so,why cannot checking before publicity...?please,correction before publicity.
ReplyDeleteகோட்டையை எல்லாம் ஆகாச கோட்டையாக்கி தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அடிமை சேவகம் செய்யும் நிலையை உருவாக்க பாடுபடும் ரஃஉப் ஹகீமினதும் ஹசனலியினதும் திட்டத்தில் அல்லாஹ் மண்ணை அள்ளி போட்டு முஸ்லிம் சமூகத்தை காதருள்வானாக
ReplyDeleteசகோதரர் Saleem khan அவர்களே, நானறிந்தவரையில் மேற்படி யாழ் முஸ்லிம் இணையத்தளம் தனிநபர் ஒருவரின் முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டு, எவ்வித நிதி வளங்களும் அற்ற நிலையில், பகுதி நேரமாக, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நடாத்தப் பட்டு வருகின்றது. தன்னார்வச் செய்தியாளர்கள் அனுப்பும் செய்திகளை proof reader ஒருவரை நியமித்து சரி பார்த்து பிரசுரிக்கும் அளவுக்கு வசதிகள் இருக்கும் என்று நினைக்கவில்லை.
ReplyDeleteமுஸ்லிம் சமுகத்தை குஉட்டி குடுக்க மாட்டன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரன் ,,faslin thambi... , ர்ஹப்ஹகீம் என்டு சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல ,,
ReplyDelete