கிழக்கு தேர்தல் - அமெரிக்க நேரடி ஆய்வு - முஸ்லிம் வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில், கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேர்தல் நடவடிக்கைகள், போட்டியிடும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் நெருக்கடிகள் பற்றி நேரில் ஆராய்வதற்காக அமெரிக்க தூதரக அதிகாரி விலிலியம் லின்சன் நேற்று மட்டக்களப்புக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து தேர்தல் தொடர்பிலான விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
காத்தான்குடிக்கு சென்று சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க வேட்பாளர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடிய அவர் இன்று காலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்போது, ஆளும் கட்சியில் போட்டியிடும் பிள்ளையான் குழு தமக்கு ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் குறித்து தாம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன் லின்சன் இன்று திருகோணமலை மற்றும் அம்பாறைக்கும் விஜயம் செய்து அங்குள்ள தேர்தல் நிலைமை குறித்து ஆய்வு செய்துள்ளார்.
Post a Comment