Header Ads



முஸ்லிம் காங்கிரஸில் மற்றுமொரு பிளவு..? பஷீர் சேகுதாவூத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் உள்நாட்டு வர்த்தகதுறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவுத் ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தனிப்பட்ட முறையில் தமது கருத்துக்களை வெளியிட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக சூரியன் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்களிக்குமாறு தெரிவித்தமை கண்டனத்திற்குரியது என்று திங்கட்கிழமை ஏறாவூர் சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் கொடும்பாவியும் ஏறாவூரில் எரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பஷீர் சேகுதாவூத்தின் உரை முஸ்லிம் காங்கிரஸில் மற்றுமொரு பிளவு ஏற்படுவதை காண்பிப்பதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளதுடன், மற்றும் சிலர் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள இவர், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாகவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மற்றும் சிலரோ தன்னை அனுபவசாலி என பீற்றிக்கொள்ளும் பஷீர் சேகுதாவூத் கட்சித் தலைவரை காட்டிகொடுத்து விட்டதாகவும், அவர் அரசாங்க பக்கம் இணநைது அமைச்சுப் பதவி பெறப்போவதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை பஷீர் சேகுதாவூத்திற்கெதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ் முஸ்லிம் இணையம் அவருடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற முயன்றபோதும் எமது முயற்சி பலனளிக்கவில்லை.

6 comments:

  1. தலைவா கவலைப்படாதே !!!!! முஷ்லிம் சமூகத்தின், மட்ரும் கிலக்கின் காவலன் நீதான் யார் எதை சொன்னாலும் சரிதான் கொடும்பாவி எரித்த மடயர்கலக்கு சில காலத்தின் பின்னர் விலன்கும் ஏன் சேய்தோம் என்ரு.
    முஷ்லிம் சமூகத்தை காட்டிகுடுத்து, கூட்டிக்குடுத்தவர் ககிம்தான் என்பதை ரனில்தான் 2002 நிரூபித்துக்காட்டினார்.ககிமின் போலி உன்னாவிரதம் திருகோனமலலையில் அதன் அர்தம்தான் என்ன? எதுவுமெயில்லை.இன்ருவரைக்கும் முஷ்லிம் சமூகம் ககிமினால் கன்டபலன் எதுவுமில்லை.காலத்தை கடத்திவிட்டார் கின்னஷ் சாதனை ?????.

    ReplyDelete
  2. இயலாவிட்டால் விட்டுவிட்டு போங்கள் சார்.
    மக்கள் விழுதுகாளாக இருக்கின்றார்கள்.
    மரம் நிமிர்ந்து நிற்கும்.

    ReplyDelete
  3. ஹகீமின் 12 வருட தலைமைதுவதிட்கு சத்திய சோதனை தூக்க முடியாத பாறத்தை பேராசைபட்டு யாறுடனும் பகிர்ந்துகொள்ளாமல் தனியே சுமக்கபோய் இப்போ கிழைகளே மிரட்டும் பட்டமரமாக மரம் எஞ்சி நிட்கிறது இன்னும் 10 வருடத்தில் மரமே இல்லாமல் போய்விடும் இனியும் ஹகீமை நம்பி முஸ்லிம்காங்கிரஸ் போராளிகள் இருந்தால் இனியாவது கூட்டு தலைமைதுவதையும் கூட்டு பொறுப்பையும் போராளிகள் போராடி சாதிக்க வேண்டும் இல்லையேல் மரத்தின் அழிவுக்கு போராளிகளே பொறுப்பு ஆக வேண்டிவரும்

    ReplyDelete
  4. இன்று உலகம் முழுவதும் இலங்கையில் இருக்கும் அரசியல் வாதிகள் போன்று முஸலிம்கள் இருப்பதால் தான் முஸ்லிம் சமூகம் பல இழப்புகளை இழந்து கொண்டிருக்கிறது.நேற்று ஒரு சம்பவம், துருக்கி,காசியாண்டபின் கார்சியக்கா பகுதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் ஒரு போலிஸ் அதிகாரி ,ஓர் மாணவன் உற்பட மொத்தம் 9 போ் உயிர் இழந்ததுடன் 60 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் இதன் பின்னணியில் சிரியா.ஈரான் மற்றும் மேற்கத்திய சக்திகளின் சதி உள்ளதாக பெரும்பாண்மையான மக்களின் கருத்து. முஸ்லிம்களே சிந்தியுங்கள் பின்னணியில் இருந்து செயற்படும் எதிரியை இனம் கானுங்கள் குர்ஆன் ஹதீஸுக்குள் இருந்தவாறு எவ்வாறு எதிரியை பிணன்னடையச்செய்யலாம் என்று.

    இவன்.
    துருக்கியில் இருந்து
    செய்யத்

    ReplyDelete
  5. @ ahlas

    செய்யத் அவர்களே, உங்கள் கருத்துக்களையும், உங்களையும் வரவேற்கின்றேன்.

    துருக்கியிலிருந்து ஒரு சகோதரர் தொடர்புகொண்டிருப்பது மகிழ்ச்சி.
    அல்லாஹ் உங்களுக்கு நல்ல சிந்தனையையும், சிறந்த எழுத்தாற்றலையும் தந்திருக்கின்றான் என்பதனை உங்கள் பின்னூட்டத்தினைப் பார்க்கும் பொழுது ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது.


    சகோதரே, துருக்கியின் தற்போதைய சமூக, அரசியல் நிலைமைகள், இஸ்லாத்தின் எழுச்சி, அங்கு நிகழும் மாற்றங்கள், பிரதமர் எர்துகானின்
    சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் அவை குறித்து மக்களின் உணர்வலைகள் போன்ற விடயங்களை எமக்கு கட்டுரை வடிவில் தெரிவிக்க உங்கள் ஓய்வு நேரத்தில் சிறிதளவு பயன்படுத்துவீர்களாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

    இன்றைய உலகில் துருக்கியிலும், எகிப்திலும் நடைபெறும் நிகழ்வுகள் உலக முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானவை என்று நம்புகின்றேன்.
    அவை குறித்த நுணுக்கமான தகவல்களை இலங்கை முஸ்லிம்கள் தெரிந்துகொள்ள உங்களாலும் உதவ முடியும், இன்ஷா அல்லாஹ்.

    இன்ஷா அல்லாஹ், யாழ்.முஸ்லிம் உங்களுக்கு களம் தரும் என நம்புகின்றேன்.

    நன்றி சகோதரரே.

    ReplyDelete
  6. கொடும் பாவி எரிப்பது இஸ்லாத்துக்கு அப்பால் பட்ட செயல்

    ReplyDelete

Powered by Blogger.