மே...! ஒயாலா காத்தான்குடி வாகே ஹதண்ட எபா
மூதுர்ர் முஹம்மதலி ஜின்னா
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பும், அடையாளமும் இருப்பது வழமை. குறித்தவொரு ஊரைச் சொன்னதும அதன் பௌதீக அமைப்பு உடன் மனக்கண் முன் வந்து நிற்கும். இப்பொழுதெல்லாம் காத்தான்குடி என்றதும் வரிசையாக பசுமை நிழல்குடை தாங்கி நிற்கும் பேரீத்த மரங்களும், ஊரின் நுளைவாயிலில் இஸ்லாமியக்கட்டடக்கலையைப் பிரதிபலித்து நிற்கும் கம்பீரத்தோற்றங் கொண்ட வரவேற்பு வளைவும் நம் மனக்கண்முன் வந்து நிற்பதை தவிர்க்கமுடியாது அல்லவா.
மட்டுமல்லாமல் அத்தகையதோர் அலங்கார வரவேறற்பு வளைவு நம்மூரிலும் அமையவேண்டும் என்ற அவாவை அது காண்போர் மனதிலும் ஏற்படுத்திவிடுகிறது. ஆடை அணிகலன்களில், வாழும் வழிமுறைகளில், வாசிக்கும் இல்லிடங்களில் தன் சமய கலாசார பண்புகள் வெளிப்படும் படியாக நடந்து கொள்வது எவ்வாறு ஓர் ஆன்மிக சுகானுபவத்தை வழங்குமோ அதே போன்றுதான் தாம் வசிக்கும் பிரதேசமும் அத்தகைய கலாசார பண்பின் வெளிப்பாடு விளங்கும் படியான சுழலை உருவாக்குவதுமாகும்.
இத்தகைய ஒரு நியாயமான ஆசை கிண்ணியா பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்திருக்கின்றது. கிண்ணியா பிரதேசமானது, திருகோணமலை மாவட்டத்தின் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட பிதேசமாகும். 2007ம் ஆண்டின் கணிப்பின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 45.47 &மானோர் (152,019) முஸ்லிம்களாவர். இதில் கிண்ணியா பிரதேசத்தின் சனத்தொகைப்பரம்பலில் (96&) சுமார் 75000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இலங்கையின் மிக நீண்ட பாலம் வடக்கில் இருந்து தெற்காக முடிவடையும் புள்ளியில் இருநதே கிண்ணியா பிரதேசம் விரிந்து செல்கின்றது. அவ்விடத்தில் ஒரு வரவேற்பு வளைவு உருவாக்கப்பட வேண்டும். அது இஸ்லாமிய கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் படியாக இருக்கவேண்டும். என்ற நியாயமான கனவு எல்லாமக்களிடமும் காணப்பபட்டது. மட்டுமல்லாது தேர்தல்காலங்களில் தவறாமல் இவ்வம்சம் விஞ்ஞாபனங்களில் இடம்பிடிக்கத் தவறுவதுமில்லை.
'யுத்தம் ஓய்ந்தது. இடம் பெயர்ந்த மக்கள் தத்தம் வாழிடங்களில் சுதந்திரமாகச் சென்று தம் சமய காலாசார தனித்துவங்களைப் பேணி சந்தோசமாக வாழலாம். இந்தத் தேசம், தேசத்தை நேசிக்கும் பல்லின மக்கள் அனைவருக்குமானது.'
என்ற ஜனாதிபதியின் அறிவிப்பிற்கிணங்க மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள வேளையில் மற்றுமோர் யுத்தத்துக்கு முகங் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது, பௌத்த தீவிரவாதம் தற்போது சிறுபான்மை மக்களின் சமய கலாசாரத்தின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் அறிவிக்கப்படாத யுத்தம் ஒன்றைத்தொடுத்து வருகிறது. குறிப்பாக அஹிம்சா மூர்த்திகள் என அறியப்படும் பௌத்த துறவிகளால் தலைமைதாங்கப்படும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், பாதுகாப்பத்தரப்பின் வேடிக்கை பார்த்தலுடன் இது நடை பெற்றுவருவதை புகைப்படங்களுடாகவும், வீடியோக்கள் மூலமும் கண்டு வருகின்றோம்.
குறுகியகால எல்லைக்குள் அனுராதபுர பள்ளிவாசல் இடிப்பு முதல்கொண்டு கிண்ணியா வரவேற்பு வளைவு அமைக்கப்படுவதை தடத்து நிறுத்தியிருப்பது வரை இதுவரை 11 தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இவை மாண்பு மகு ஜனாதிபதியவர்கள் உருவாக்கித்தந்த சமத்துவமான சமாதானச்சூழலை மலினப்படுத்தும் விதமாக நடைபெற்றுவருகின்றன.
தர்மச்சக்கரம, சிங்கமுகம், அரசிலை கொண்ட நாடெங்கிலும் சிங்களப்பிரதேசங்களில் காணப்படுவது போன்ற வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது போல மேற்படி இஸ்லாமிய கட்டடக்கலையம்கங்களை பிதிபலிக்கும்விதமான வரவேற்பு வளைவு யாரால் அமைக்கப்படுவது என்ற உள்ளுர் அரசியல் தரப்புகளுக்கிடையிலான பல்லாண்டுகால இழுபறியைத்தாண்டி கிண்ணியா நகரசபைத்தலைவர் டொக்டர் ஹில்மி விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களால் நான்கு மில்லியன் ருபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதுதான் இதனைத்தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் பௌத்த கடும்போக்காளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 10.06.2012 அன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அதற்கு தலைமைதாங்கிய புத்தசாசன பிரதியமைச்சர் குணவர்த்தன 'கிண்ணியாவில் வீதிக்குக் குறுக்கே என்ன கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்' என கிண்ணியா நகரசபை தலைவரைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார்.(அவ்வாறான தொரு கட்டுமானமானது உள்ளுராட்சி சபைக்குட்பட்டது என்பதால் அது பற்றி நகரபிதாவிடம் வினவப்பட்டது) 'நாங்கள் வரவேற்பு வளைவு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்' என பதிலளிக்க' யாரைக்கேட்டுக் கட்டினீர்கள். யார் அதற்கு அனுமதி தந்தது' 'நாங்கள் இதற்குரிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிபார்சிற்கிணங்கவே வளைவினை அமைக்கின்றோம்.'
'இங்கே பாருங்கள்...அந்த வீதி இருக்கின்றதே... அது(யு-15) புனிதநகரான சேருவிலைக்குச் செல்கின்ற ஒரு வீதி. அப்படியான 'புனித வீதி'யில் காத்தான்குடியில் உள்ளது போல கட்டக்கூடாது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியை விட நீங்கள் இக்கட்டுமானத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழவின் அனுமதியைப் பெறவேண்டும் புரிந்ததா' என புத்தசாசன பிரதியமைச்சர் கௌரவ குணவர்த்தன அவர்கள் அறிவுறுத்தினார்.
இவ்வாறு பிரதியமைச்சர் பணித்த போதும் தங்களிடம் முறையான வீதியபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி ஆவணம் இருப்பதால் நகரசபையானது தொடர்ந்தும் கட்டுமானப்பணிகளை முன்கொண்டு சென்றது.
இச்சந்தர்ப்பத்தில் பணிகள் தொடர்வதை அவதானித்த மாவட்ட செயலகம் வரவேற்பு வளைவு தொடர்பான ஆவணங்களை உடன் தமக்கு அனுப்புமாறு கிண்ண்pயா நகர சபையைப் பணித்து ஆவணங்களைப்பெற்றுபரிசீலித்தது. அவை முறையாக இருப்பதை கண்டு கொண்டது. பணிகள் தொடர்ந்தது.
அடுத்த கட்டமாக இக்கட்டுமானப்பணிகள் கரையோரப்பாதுகாப்புக்கு பாதகமாக இருக்கிறதா எனப்பார்வையிட கரையோரபாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று கிண்ணியாவுக்கு விரைந்தது. ஏற்கனவே அரசாங்கமே நூறு மீட்டருக்குள் மக்களுக்கு வாழிடங்களை அமைத்துக் கொடுத்திருக்க இருநூறு மீட்டர்களுக்கு அப்பால் உள்ள வரவேற்பு வளைவினால் கiயோரத்தக்கு எதுவித பாதிப்புமில்லை என்பதை நன்கறிந்து, தங்களுக்கு பிழையான தகவல் தரப்பட்டதை உணர்ந்து கொண்டு அவர்கள் இதனைத்தடுப்பதறியாது சென்றுவிட்டனர்.
அதற்கடுத்ததாக் கொழும்பில் இருந்து இவ்வளைவுக்கான அனுமதி குறித்து பெருந்தெருக்கள் அதிகார சபை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையைத் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறது. அப்போதும் வளைவு கட்டுவதில் எந்தப்பிரச்சினையும் இல்லலை என்ற பதிலே கொழும்புக்கு வழங்கப்பட்டது.
பொதுவாக கட்டடம் ஒன்றினைக்கட்ட வீதியபிவிருத்தி அதிகார சபையின் அனுதிபெறுவதே பொதுவான நடைமுறையாகும்.எனினும், அதனை தடுக்க சட்டபூர்வமாக எடுக்கப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்விகாணவே இறுதியாக கடந்த 27.07.2012அன்று கொழும்பில் இருந்து பெருந்தெருக்கள் அதிகாரசபை 'வீதி அபிவிருத்தி அதிகார சபை தந்த அனுமதி செல்லாதென்றும் உடன் கட்டுமானப்பணிகளை நிறுத்துமாறும் அறிவுறுத்தி, அனுமதி தேவையெனில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கழுவிடம் பெற்றுக்கொள்ளுமாறும்' பணித்து கிண்ணியா நகரசபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதைத்தொடர்ந்து பணிகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. ஆனால் ஏற்கனவெ இக்கட்டுமானப்பணி தொடர்பாக பெருந்தெருக்கள் அதிகாரசபை மாகாணப்பபணிமனையை தொடர்பு கொண்டு விசாரித்த போது மேற்படி கட்டடம் சட்டபூர்வமானது என உறுதிப்படுத்திய போது அதில் உடன்பாடு கண்டிருந்தது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின் தற்போது அதே பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை மறுத்து கட்டடப்பணிகளை நிறுத்தக்ககோரி அறிவிக்கிறதெனில் அங்கு ஒரு நிர்ப்பந்தத்தைச் சந்தித்திரக்கிறதென சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.
மேற்படி வளைவையமைக்க மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிடம் புதிதாக ஆனுமதி பெற வேண்டுமெனில்,அவ்வனுமதி எவ்வாறிருக்கும் என்பதை இக்கட்டுரையின் தலைப்பை மேலும் ஒருதடவை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
போருக்குப்பிந்திய முஸ்லிம்கள் மீதான பௌத்த தீவிரவாதத்தின் தாக்குதல்கள் டம்புள்ளயில் புனித நகரென்று ஆரம்பித்து தெகிவளையில் காவியுடைதரித்த பௌத்த துறவிகளே தெருவில் நின்று பள்ளிவாசலுக்கு கல்லெறிந்தது ஈறாக கிழக்கு நோக்கி இப்போது குறிப்பாக திருகோணமலை மாட்ட முஸ்லிம்களில் மையங் கொண்டுள்ளது.
1.கண்ணியாய் வெந்நீருற்று முஸ்லிம் பெரியார்களின் அடக்கத்தலத்தை யாரும் தரிசிக்க முடியாது. கண்ணியாவுக்கு செல்லும் வழியில் இருந்த பள்ளிவாசல் இருந்த இடம் தெரியாமல் அகற்றப்பட்டுவிட்டது(தற்போது கண்ணியாவில் சிறுபான்மையினரின் சமய கலாசாசர அடையாளங்கள் எதனையும் காணமுடியாது. அந்தளவிற்கு பௌத்த அடையாளப்படுத்தல்கள் ஆக்கிரமித்துள்ளன)
2. 2012.08.03 அன்று இரவு மூதூர் ஜபல்நகர் மூணாங்கட்ட மலையில் தியான நிலை புத்தர் சிலை வைக்கப்பட்டாயிற்று.(இனி கல்லுடையாதீர் சிலையதிரும். வயற்பரப்பில் கால் வையாதீர் அவை புனித பிரதேசம் என்ற கட்டளைகள் எல்லாம் படிப்படியாக வரவிருப்பதை எண்ணி தம் ஜீவனோபாயம் என்னாகுமோ என மக்கள் கதிகலங்கிப்போயுள்ளனர்)
3. நூற்றாண்டு காலபழைமைவாய்ந்த பள்ளிவாசல்உட்பட ஜீவனோபாய மீன்பிடியையும் வாழிடத்தையும் இழந்து கருமலையூற்றுமக்கள் ராணுவத்தால் துரத்தப்பட்டுள்ளனர்.(அக்கிராமத்தைச்சுற்றி முட்கம்பி போடப்பட்டு குடிமனைகள் அகற்றப்பட்டு உல்லாச ஹொட்டல்களுக்கான ஆயத்தப்படுத்தல்கள் இடம் பெறுகின்றன.)
4.தற்போது கிண்ணியா வரவேற்பு வளைவு கட்டுதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஓரு நகரசபையானது ஒரு உள்ளுர் மக்களது அரசியல் ஆணையைப்பெற்ற மக்கள் தாபனமாகும.; அது முற்றுமுழுதாக மக்களது கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகும்.
அப்பிரதிபலிப்பில் ஒன்றே, ஒரு சபை தன் ஆள்புல எல்லையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், அழகாகவும் வைத்திருக்க விரும்புவதாகும். அதற்காகவே வரவேறபு வளைவைக் கட்டியது.
இன்று ஒரு நகர சபை ஒரு வரவேற்பு வளைவை கட்டுவதற்கும் தடை விதிக்கப்படுகிறதென்றால், எப்படி மாகாணசபைக்கான காணி, பொலிஸ் அதிகாரம், பதின்மூன்று பிளஸ் எல்லாம் வழங்கப்படப்போகிறது?( இந்த லட்சணத்தில் முதலமைச்சர் இழுபறிவேறு)
போருக்குப்பிந்திய இலங்கையில் குறிப்பாக முஸ்லிம்களுடைய சமயகலாசார தனித்துவ வாழவானது, பௌத்த தீவிரசக்திகளினால் பகிரங்கமாக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அதுவும் பாதுகாப்புத்தரப்பின் முன்னிலையில் நடைபெறுகின்றது.
அத்தகைய சக்திகள் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படாததினால் அது, இன்னும் உற்சாகத்துடனும் முனைப்புடனும் செயற்படுகின்றது. எந்தளவுக்கெனில் புனித நகர பிரகடணம் எல்லாம் பழங்கதையாகி இப்போது புனித வீதிப் பிரகடணம் செய்யுமளவிற்கு பரிணாமங்கண்டுள்ளது.
கிண்ணியா வரவேற்பு வளைவை தடுத்தமைக்கு புத்தசாசன பிரதியமைச்சர் கூறிய காரணம், அவ்வீதி (யு-15) புனித சேருவிலைக்கப் போகின்ற படியால் அதற்கு குறுக்கே காத்தான் குடியில் உள்ளது போன்று கட்டக்கூடாதென்ற நிபந்தனையும், கட்டளையும் ஆகும்.
இவ்வறிவுறுத்தல்களே இன்று முஸ்லிம்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கிறது. புனித பூமிப்பிரகடணம், இன்று புனிதவீதிப்பிரகடணம் அளவுக்கு முன்னேறியிருக்கிறதென்றால், நாளை வசிப்பதற்கு ஒரு விடேனும், பாவிக்க ஒருகழிப்பறையேனும், கட்டுவதாயினும் பௌத்த தீவிரதரப்பாரின் பார்வைக்கு அவை உட்படுத்தப்பட்டு, அங்கு இஸ்லாமிய கட்டட கலையம்சம் எதுவுமே இல்லை என்கின்ற கிளியரன்ஸ் லெட்டர் பெற்றதன் பின்னரே கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படலாம் என்ற சட்டங்களும் திட்டங்களும் வராதென்பதற்கு என்ன உத்தரவாதம்?
இது ஒரு கற்பனையேதான் என புறக்கணித்து விட முடியாது. ஏனென்றால,; வீதி வரவேற்பு வளைவு கட்டுவதற்கான அனுமதியை வீதிஅபிருத்தி அதிகாரசபை வழங்குவதற்கு பொறுப்பாக இருந்தும், அச்சபை அனுமதியளித்திருந்தும் அவையெல்லாம் மறுக்கப்பட்டு வேறிடத்தில் அனுமதிபெறும்படி நிபந்தனை போடப்படுகிறதெனில், இதன் அடுத்தடுத்த கட்டம் நிச்சயமாக சுமுகமாக இருக்கப்போவதில்லை. என்பதையறிந்து கொள்ள பெரிய தர்க்க அறிவெல்லாம் தேவையில்லை.
சரி, இத்தனை அவலமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, முஸ்லிம் தேச நீரோக்கள் எங்கே? என்ற வினாவும் இங்கு எழாமல் இல்லை. இது, அவரவர் பிடில்களை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டிய பருவ(தேர்தல்)காலம். இந்தத்தீர்க்கமான நேரத்தில் சில்லறைப்பிரச்சினைகளில் எல்லாம் கவனத்தை சிதறவிட்டால் லட்சியம் சிதறிவிடும். ஆகையால் வெற்றிலையில் சுண்ணாம்பாகவும், வெற்றிலைபாதி மரம்மிதியாகவும் என அவர்கள் ஊரெல்லாம் பறந்த பறந்து துணுக்குத் தோரணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது போய் சொல்லியழுதால் வேண்டுமானால் தற்காலிக நிவாரணமாக ஒரு ரெடிமேட் ஆவேச அறிக்கை ஒன்று கிடைக்கலாம் மற்றும் படி மக்கள் தான் எப்போதும் போல தம்பாரச்சிலுவையை சுமந்து கொள்ள வேண்டும்.
ஆக, மக்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். அதற்கு ஆதாரம் நாளாந்தம் பௌத்த தீவிரவாதம் முஸ்லிம்களின் சமய கலாசார உரிமைகளில் பகிரங்கமாக தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றமையாகும். இப்போது இந்நிலையெனில், எதிர்காலம்...!!??
கிண்ணியாவில் சட்டதரணிகளுக்கு பஞ்சமா என்ன??? சமூக உணர்வுடன் இதனை நீதிமன்றத்தின் துணை கொண்டு எதிர்கொள்ளலாமே நம் முஸ்லிம் சமூகம் ஏன் பிரச்சினைகளை சொல்லி திறியும் அளவுக்கு நீதி மன்றத்தை நாடி நீதி கோற தயங்குகிறது?
ReplyDeleteஇந்த அரசாங்கம்தான் முஸ்லிம்களை கௌரவமாக வாழ வைத்தது என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளாரே!
ReplyDeleteஅங்கே யாழ்ப்பாண முஸ்லிம்கள் வீடுகள் இன்றி இருக்கிறார்கள். ஆனால் மூதூரில் வரவேட்பு வளைவு அமைக்க நன்கு மில்லியன்களை
ReplyDeleteஅமைச்சர் ஒதுக்கியிருக்கிறார். இவருக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகள் தெரியவில்லையா? தயவு செய்து வீண் விரயம் செய்யாதீர்கள். இந்த நன்கு மில்லயொனுக்கு யாழ்ப்பாணத்தில் பத்து வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்க முடியும். அனால் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு இந்த நிதி மூதூருக்கு வழங்கப் பட்டுள்ளது. யாழ் முஸ்லிம்கள் அமைச்சரிடம் சென்றால் அள்ளி வழங்குவார் அல்லவா?
இனி இலங்கை முஷ்லிம்கலை அல்லாஹ்தான் காப்பாற்ற வேன்டும்.
ReplyDelete