Header Ads



பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதன் பின்னணியில் மு.கா. - இது அதாவுல்லாவின் சந்தேகம்..!


பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என்று நான் சந்தேகப்படுகின்றேன். முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பெரும் வீழ்ச்சி காணப்படுகின்றது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தமது வங்குரோத்து நிலையை மறைப்பதற்கு பள்ளிவாசல்களை உடைக்கச் செது விட்டு வாக்குகளைக் கேட்கின்றார்களோ என்று பயப்படுகின்றேன்.

இவ்வாறு தேசிய காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கல்முனையில் தேர்தல் பிரச்சார அலுவலகம் ஒன்றினைத் திறந்து வைத்தன் பின்னர் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

முஸ்லிம்களுக்கும், அரசாங்கத்திற்மிடையே குழப்பங்களை ஏற்படுத்தி விடுவதற்கு நோர்வே அமெரிக்க போன்ற நாடுகள் சதித் திட்டங்களை வகுத்துள்ளன. இச்சதித் திட்டங்களின் ஒரு அங்கமாகவே பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் மோதவிட்டு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸும் செயற்பட்டுக் கொண்டிருக்கினறதோ என்று நான் சந்தேகப்படுகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் பெரும் வீழ்ச்சி காணப்படுகின்றது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தமது வங்ரோத்து நிலையை மறைப்பதற்கு பள்ளிவாசல்களை உடைக்கச் செது விட்டு வாக்குகளைக் கேட்கின்றார்களோ என்று பயப்படுகின்றேன்.

முப்பது வருடமாகப் போராடியவர்களினால் ஒரு இஞ்சி நிலத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதலால், சண்டித்தனம் பேசி எதனையும் சாதித்துக் கொள்ள முடியாது. நமது உரிமைகளை பக்குவமாகப் பேசிப் பெற்றுக் கொள்ள வேண்டும.

அல்-அக்ஸா பள்ளிவாசல் யாரின் கைகளில் இருக்கின்றது. உலகம் அழியும் வரை இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செயும். பள்ளிவாசல்களின் தாக்குதல்களுக்குப் பின்னால் தீய சக்திகள் இருக்கின்றன. இத் தீய சக்திகள் இலாபம் அடைந்து கொள்வதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

பள்ளிவாசல் தாக்கப்படும் விடயத்தில் நெத்தலிப் பயில்வான்கள் போன்று சண்டித்தனம் பேசி எத்தனை பள்ளிவாசல்களை பாதுகாக்க முடியும். அரசாங்கம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் மீது பொக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அரசியல் இலாபம் தேடக் கூடாது. உண்மையைப் பேச வேண்டும்.

பிரபாகரன் மரணிக்கும் வரை பிரபாகரனைப் பற்றிப் பேசா ரவூப் ஹக்கீம் அவர் மரணித்த பிறகு வாக்குப் பெற்றுக் கொள்வதற்காக வீரம் பேசிக் கொண்டிருக்கின்றார். பெரும்பான்மையினர் வாழ்கின்ற பல பிரதேசங்களில் பள்ளிவாசல் பாதுகாப்பாகவே இருக்கின்றன. கேகாலையில் உள்ள பள்ளிவாசல் அந்த நகரத்தை விடவும் பெரியதாகும். பதியத்தலாவயில் எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன என்று கேட்கின்றேன். அங்கும் பள்ளிவால் இருக்கின்றன.

கல்முனை, மூதூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு கருப்பு முத்திரை குத்தியவர்தான் ரவூப் ஹக்கீம். சம்மாந்துறையில் அரைவாசிக் பேருக்கு கருப்பு முத்திரை குத்தினார். அவ்வப்போது ஆட்சிக்கு வரும் நல்லவர்களை ஆதரித்து எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் எமது பொறுப்பாகும்.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு அமெரிக்கா நோர்வே போன்ற நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதனை முஸ்லிம் காங்கிரஸும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சதிக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் வெகுவாகக் குறைந்து விட்டன. மட்டக்களப்பில் வாக்குகளில்லை, திருகோணமலையில் வாக்குகளில்லை. இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலையாகும்.

15 comments:

  1. லூசுபோல பேசுவதற்கு இவரைத்தவிர வேறு யாரும் பொருத்தம் இல்லை

    ReplyDelete
  2. ஆஹா சபாஸ் அபடியே புலனாய்வாலர்களுக்கும் துப்பு கொடுங்க அதனாலதானா டசின் கணக்கில சட்டதரனிகள வெச்சிட்டு சும்மா இருக்காக??? இதுக்குமேலயும் மரகாரங்க அரசியல் ஆதாயம் தேடுரத விட்டிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க துணியாவிடில் அதாவுல்லாஹ் சொல்வதையும் நம்ப ஆக்கள் சேர்வதை தடுக்க முடியாது

    ReplyDelete
  3. You are the greatest fool in the world.

    ReplyDelete
  4. சும்மா இருங்க முபாறக், அவ்வப்போது ஆட்சிக்குவரும் ”நல்லவர்களை” ஆதரித்து எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் எமது பொறுப்பாகும். என்று இவர் சொல்லியிருப்பதனைப் பார்த்தீர்கள் தானே. இவர் சொத்துச் சேர்த்திருப்பது பற்றி அக்கரைப்பற்றில் சர்ச்சை கிளம்பியபோது என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா? ”நான் ஊராரின் பணத்தை அபகரித்துச் சொத்து வாங்கவில்லை. இது அரசாங்கத்தின் மூலம் (கொமிஸன்) நான் பெற்றுக் கொண்டவை” என்று பகிரங்கமாகவே மேடையில் பேசினார். இப்போது புரிகின்றதா அந்த ”நல்லவர்கள்” யாரென்றும், ”நாம்” யாரென்றும்.
    ஐயாவுக்கு வயதாகியும் விட்டது. யாராவது இவருக்கு மௌத்தைப் பற்றியும், மண்ணறை வாழ்க்கை பற்றியும் சொல்லுங்கள்.
    அதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை இருந்தால்தானே...

    ReplyDelete
  5. உங்களுக்கு இலங்கை யில் உள்ள பள்ளிகள் உடைக்கப்படும் போது அமைதியாக இருந்து விட்டு ஏன் இப்போது மட்டும் வாய்திறந்து பள்ளி எங்கோ இருக்கும் பள்ளி பற்றி பேசுகிரீகள். அஸ்வருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசலாமே?? நீங்களும் வாக்கு வங்கியை நிரப்ப தானே இந்த குத்தாட்டம்???

    ReplyDelete
  6. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

    ReplyDelete
  7. athaullakku SLMCya esuratha utta vera polappe kidayathu, eppudi athaulla ungada mattu manadaikku ippudi ellam yosina varuthu? nakkura naaikku sekkenna sivalingamenna? nalla nakkureeha athaulla

    ReplyDelete
  8. முஸ்லிமையும் சிங்களவர்களயும் மோதவிடவேண்டும் என்பதில் அமெரிக்கா நோர்வே போன்ற நாடுகள் பின்னனி எனபது நன்கு அறிந்த விடயம் ஆனால் மு.கா சும் உண்டா எணபது சந்தேகமே..

    ReplyDelete
  9. yarumai maattai ippoluthuthan kaanakoodiyathaha ullathu. mokku maadu

    ReplyDelete
  10. Emmudaya samukatai kuuti kodutarhal ,katikodutarhal ivarhali tavira yarum illai pin varupavar hal
    Athavalla, Hisballa, Risad,innum palar

    ReplyDelete
  11. பள்ளி வாசல்களுக்கெதிரான பௌத்த அடிவருடிகளின் செயற்பாடுகளை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேச முடியாதளவுக்கு, பேரினவாத அரசாங்கத்தை நக்கிக்கொண்டு திரியும் இந்த மாதிரி சமூக துரோகிகளை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு முழு முஸ்லிம் சமூகமும் ஒன்று பட வேண்டும். அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு செய்கின்ற அநீதிகளை மூடி மறைக்க இன்னொரு முஸ்லிம் மீது பழி சுமத்துகிறான். இப்படி சமூகத்தை காட்டிகொடுத்து அரசியல் செய்கின்ற இவனையும் இவனைச் சேர்ந்தவர்களையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும்.

    ReplyDelete
  12. SALAM RAMADAN KAREEM DEAR MUSLIM BROTHERS, I Accept Jazeel brother statement.also i thing MR.Athaullah batter you change your name from muslim to other ,,,, because a Muslim never say like irresponsible statements.i not seen defrent between Damblla Therar and Athaulla,

    ReplyDelete
  13. இவனுக்கு அல்லாஹ்வின் பள்ளி எல்லாம் ஒரு பொருட்டல்ல, எப்படியாவது இலக்சனில் வென்றால் போதும். போன பிரதேச சபை இலக்சனில் அக்கரபத்து மர்கஸ் பள்ளியில் தனது மகனுடன் குடி வெறியர்களுடன் வந்து அட்டகாசம் செய்தான், அக்கரைபட்டில் உள்ள பள்ளிகளில் அவனின் அடி வருடிகளை போட்டு அவனுக்கு வோட்டு போடும் படி சொல்கிறான். ரொம்ப துல்றான் மிக வரைவில் பொதி சுமப்பான்

    ReplyDelete
  14. 4:112 وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
    4:112. மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
    4:156 وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا
    4:156. இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
    24:4 وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ
    24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
    24:6 وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَاءُ إِلَّا أَنفُسُهُمْ فَشَهَادَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَادَاتٍ بِاللَّهِ ۙ إِنَّهُ لَمِنَ الصَّادِقِينَ
    24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
    33:58 وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
    33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
    60:12 يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ۙ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
    60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

    ReplyDelete

Powered by Blogger.