Header Ads



முஸ்லிம் காங்கிரஸை உடைத்து, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க சதி..?

 
தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் காங்கிரஸிள் தவிசாளர் சேகுதாவூத் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து திடீரென இராஜினாமாச் செய்துள்ளதையடுத்து அந்தக் கட்சிக்குள் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரச வளங்களை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை தூற்றித்திரிவது மனச்சாட்சிக்கு விரோதமானதென்ற காரணத்தினாலும் மு.காவின் முழு நேர ஊழியனாக செயற்படும் எண்ணத்திலுமே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
இந்த இராஜினாமாவுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஏறாவூர் புன்னைக் குடாவில் அவர் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கூட்டத்தில் கட்சியின் போக்கு, தனது நிலைப்பாடுகளை எடுத்து விளக்கிய அவர்,  மட்டக்களப்பு மாவட்ட ஐ.ம.சு முன் னணி ஆதரவாளர்கள் தமது விருப்பு வாக்குகளில் ஒன்றை அலி சாஹிர் மெளலானாவுக்கு வழங்க வேண்டுமென்று அன்புக் கோரிக்கையையும் விடுத்திருந்தார். இந்தக் கூற்று மு.கா உயர்பீடம் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட மேற்கொண்ட தீர்மானத்துக்கு தமது முழுமையான ஆதரவை அவர் வழங்காத போதும் கட்சியின் தீர்மானத்துக்கு கட் டுப்பட்டு மெளனமாக இருந்து வந்த சேகுதாவூத், ஏறாவூர் புன்னைக் குடாவில் மு.காவின் சின்னமான மரத்தைக் காட்சிப்படுத்தாமல் ஏற்பாடு செய்திருந்த எழுச்சிக் கூட்டத்தில் தமது உள்ளக்குமுறல்களை கொட்டியிருந்தார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே அவரது உரையின் உள்ளர்த்தம் என அரசியல் கருத்து வெளி யிட்டுள்ளனர்.
 
மு.கா தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததன் பின்னர் அக்கட்சியிலுள்ள பாராளுமன்ற உம்.பிக்கள் பலர் சேகுதாவூத் எம்.பியை தனித்தனியாகச் சந்தித்தும் தொலைபேசி மூலமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்திருப்பது கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
 
இதேவேளை அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மு.கா எம்.பிக்கள் மாகாண சபைத் தேர்தலில் மு.கா வேட்பாளர் தெரிவில் இடம்பெற்ற குளறுபடிகளால் மனம் நொந்து போயுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மு.கா எம்.பியான சின்ன தெளபீக்கின் அரசியல் எதிரியான ஹஸன் மெளலவியை மு.கா வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச் செய்தமை, அம்பாறை மாவட்டத்தில் கட்சியுடன் தொடர்பற்ற பணக்கார வர்க்கத்தினரையும் புது முகங்களையும் நிறுத்தியமை கட்சி மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி, காத்தான்குடி போன்ற இடங்களில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க ஆகிய கட்சிகளுக்கிருந்த அபரி மிதமான செல்வாக்குக்கு மத்தியிலும் தன்னந்தனியாக நின்று போராடி கட்சியை வளர்த்த தவிசாளர் சேகுதாவூத்துக்கு கட்சி உயர் மட்டத்தினால் அநீதி இழைக் கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மு.கா தலைவருக்கு எதிராக 33 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியை சின்னா பின்னமாக்கிய ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹாபிஸ் நkரை கட்சிக்குள் உள்வாங்கி அவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்கியதுடன் முதன்மை வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தமை சேகுதாவூத் முகத்தில் கரி பூசுவதற்கே என்று அவரின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
 
எது எப்படியிருந்தபோதும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மு.கா அதிருப்தியாளர்கள் மற்றும் முஸ்லிம் அரசியலில் கொடிகட்டி பறப்பவர்களை இணைத்து பலமான முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது.
 

4 comments:

  1. So the fall of SLMC is imminent. Good news for Muslims and to all Sri Lankans who hate racism/communalism.

    ReplyDelete
  2. மெளலவி ஹசன் அஸ்ஹரி மத்திய மாகாணத்தைச் சேந்தவர். வட்டதெனிய அல் மானார் கல்லூரியில் விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியராகக் கூட கடமையாற்றியுள்ளார். புலமைப் பாரிஸில் மூலம் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

    இவருக்கும், ஈரான் தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. கிண்ணியாவில் இவர் மதராஸா ஒன்றை நடாத்தி வருவதாக அறிய முடிகின்றது.

    ReplyDelete
  3. Iraanudan thodarfu? Matharasa nadathuhintraara? appadiyaanal athu enna matharasa? Siya??????? Allah Paathuhaakkattum.

    ReplyDelete
  4. @Mohamed Mihlar,

    ஈரான் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளதை 1997 - 2003 ஆண்டுகளில் தனிப்பட ரீதியாகவே அறிவேன்.

    இவர் நடத்துவது ஒரு பெண்கள் மதரசாவாக இருக்க வேண்டும், உறுதியாக சொல்ல முடியவில்லை.

    மதரசாவின் பாடத்திட்டம் குறித்தோ, மதரசாவிற்குள் ஷீயா ஊடுருவல் உள்ளதா என்பது குறித்தோ எதுவும் தெரியாது. குறித்த பகுதியைச் சேர்ந்த விஷயம் தெரிந்த யாராவது தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.