Header Ads



அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அஸ்வர் எம்.பி. சவால் விடுக்கிறார்

 
கிழக்கில் முஸ்லிம் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தன்னு டைய இனவாத, வகுப்புவாத பிரசாரத்தை நிறுத்தினால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பெருமளவு நன்மையைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், நாவற்குழி, அலீம் நகர், புல்மோட்டை, இறால்குழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டங்களில் உரையாற்றும் போது வலியுறுத்தினார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம்.எச். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு; “கடந்த காலத்தில் பெரும் முஸ்லிம் தலைவர்களான டாக்டர் டி.பீ. ஜாயா, சேர் ராக் பரீத், டாக்டர் எம்.சி.எம். கலீல், அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் ஆகியோர் முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் நட்புறவுடனும், நல்லெண்ணத்துடனும் வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் ஐக்கிய இலங்கை மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
 
முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வை கருத்திற்கொண்டு முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை சமூகத்துடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். முஸ்லிம்களின் 75 சதவீதமானோர் தென் இலங்கையிலும் 25 சதவீதத்தினரே வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. கிழக்கில் இன்று மேற்கொள்ளப்படும் இனவாத பிரசாரங்கள் தென் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
எனவே, நாம் பேசும் வார்த்தைகளை அவதானமாகப் பிரயோகிக்க வேண்டும். எமது தவறான சொற்பிரயோகங்களினால் மியன்மாரில் ஏற்பட்டது போன்ற ஒரு சூழ்நிலை உருவாவதற்கு நாம் இடமளிக்கலாகாது. எங்கள் நாட்டில் விகாரைகள், கோயில்களுக்கு அருகில் பள்ளிவாசல்களும் இருப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்துள்ளது என அல்ஹாஜ் அஸ்வர் தெரிவித்தார்.’’
 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பள்ளிகள் உடைக்கப்பட்டுள்ளன என்று செய்யும் போலிப் பிரசாரங்கள் குறித்து அல்ஹாஜ் அஸ்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்காவது ஓரிடத்தில் ஒரு பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருந்தால் அதனை தமக்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுமாறு ரவூப் ஹக்கீமுக்கு சவால் ஒன்றையும் விடுத்தார்.
 
தம்புள்ளை, தெதுறுஓயா கம, ஒபே சேகரபுர, தெஹிவளை ஆகிய இடங்களில் அநாவசியமான சில சம்பவங்கள் இடம்பெற்றது உண்மைதான். ஆயினும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விடுத்த கடுமையான உத்தரவை அடுத்து இப் பகுதிகளில் பொலிஸ் மா அதிபர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
 
ரமழான் இரவுகளில் தராவீஹ், கியாமுல்லைல் தொழுகைகளையும் முஸ்லிம்களின் ஐந்து வேளை தொழுகைகளும் கடந்த காலத்தில் எல்லா பள்ளிவாசல்களிலும், தொழுகை மண்டபங்களிலும் எவ்வித தங்குதடையின்றி அமைதியாக நடைபெற்றதை இங்கு நாம் அவதானத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வன்னி மாவட்டத்தில் சுமார் 70 பள்ளிவாசல்களை புலிகள் இயக்கமே நிர்மூலமாக்கியதை மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உஸ்மானியா கல்லூரி, கதீஜா கல்லூரி ஆகியவற்றையும் புலிகளே உடைத்து சிதைத்ததுடன் நின்று விடாமல், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை 24 மணித்தியாலத்திற்குள் விரட்டியடித்தனர். இந்த மக்கள் இன்றும் கூட முகாம்களில் அகதிகளாக துன்பம் அனுபவித்து வருகிறார்கள் என்றும் அல்ஹாஜ் அஸ்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இரகசிய புரிந்துணர்வுகளை செய்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கு முயற்சிகளை செய்து வருகிறார் என்றும் அல்ஹாஜ் அஸ்வர் மேலும் குற்றம் சாட்டினார். இது ஒரு பகல் கனவு என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு ரவூப் ஹக்கீம் துரோகம் இழைக்கிறார் என்று கூறினார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்மாந்துறையிலும், புல்மோட்டையிலும் உரையாற்றும் போது தாம் முஸ்லிம்களுக்கு பூரண பாதுகாப்பு அளிப்பதுடன் அவர்களுக்கு சொந்தமான காணிகளை மற்றவர்கள் பறித்து விடுவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்த உறுதிமொழி குறித்து, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்றும் கூறினார்.
 
ஜனாதிபதி தமது உரையில் தாம் சிங்களவர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியாக இருக்கவில்லை என்றும் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், மலாய் இனத்தவர்கள் என இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக இருக்கிறேன் என்று உறுதியளித்தார் என்றும் அல்ஹாஜ் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.
 
சுற்றாடல் துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களான நஜீப் அப்துல் மஜீத், புல்மோட்டை தெளபீக் ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் பெருமளவு அங்கத்தவர்கள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களையும் வெற்றிலை கொடுத்து கெளரவித்து அவர்களிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவ அட்டைகளை பெற்றுக்கொண்டார்கள்

6 comments:

  1. I thing your Eyes is damege go to hospital and cheukp your Eyes,
    you dint see it, dampulla masjid destroy we have video proof oky
    your big cheater and theaf you dont care of the muslim comunity ,you need only post, when unp give u nastional list mp unp is great when is not give u national list mp is it bed you are like a animal ,

    ReplyDelete
  2. அஸ்வர் மாமா,
    திருகோணமலை மாவட்டத்தில் நீங்கள் ஆற்றியுள்ள உரை வெகுளித்தனமானது.
    இலங்கையில் இனவாதிகள் யார் என்பதை உங்களது கண்ணை தேசியப்பட்டியல் மறைத்துள்ளது.
    இன்று கபில வஸ்த்து புத்தரின் எலும்பு வைக்கப்பட்டுள்ளதால் மிருக பலியை ஜனாதிபதி தடை செய்துள்ளார். இது இந்துக்களுக்கு!!!
    நாளை உங்களது ஹஜ் வேளையில் நீங்கள் உள்கீய கொடுக்க போகும் போதும் இந்த கபில வஸ்த்து வரும் அஸ்வர் மாமா அப்பயாவது உங்களுக்கு விளங்கினால் சரியே மாமா.


    ReplyDelete
  3. Mr.Asvar is blaming SLMC and thier Leaders always.
    While Marhoom M.H.M. Ashraf was speaking in the Parliament Asvar always was crossing over to his speach beeing in the MP post in UNP. never he won any debate from Marhoom Ashraff.
    in thi bat also Asvar "Olakka" will not win.
    whenever SLMC in Srilanka Asvar speaking like these without any connection. so dears dont take his any artical as a serious.

    ReplyDelete
  4. koodarikaampu KOODARIKKAAMPOO.....HE IS A ?????

    ReplyDelete
  5. mr.Azwer in that time (Sir DP,Jaya, Sir,Kaleel, Sir.Razik Fareed period Ummay Poola Pachonthihalum , Umaay pola Samoohathay Kaattiyum Koottiyum Kodukkum Koodarik Kaampuhal Irukkavillai. Muthallil Umathu Peyarai Muslim Namilirunthu Veeru Peyaraha Maattikkol. Ummai Muslim Eantru Solluvathal Muslim Samooham Vetkappaduhirathu..

    ReplyDelete
  6. Dear Respected Muslim Brothers I am humbly requesting you all. please don't call This bullshit Azwer with Sear Name 'AL HAAJ'. He is not suitable for that. He is from the beginning Continually disturb while Our Hon Political Leader Hon:MHM.Ashraff Speech in Parliament,He is a voiceless Dog. He is a 5 Knowledge Donkey, He is always going behind cheep rate Bones. We are schemed to say your a Muslim. Also Mr.Fawzi and MR.Kader(Kandy), Also Mr.Athaulla and Mr.Faizal Musthafa this all are coming on the way behind AZWER on the way

    ReplyDelete

Powered by Blogger.