Header Ads



காவியுடை பயங்கரவாத்தை ஒழிக்க மஹிந்த ராஜபக்ஸ முன்வர வேண்டும் - ரவூப் ஹக்கீம் அழைப்பு

அபு ஆதில்

நாட்டில் பல வருடங்களாக புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தை அளித்தது போன்று ஜனாதிபதி அவர்கள் கவியுடையணிந்த பயங்கர வாதத்தையும் ஒழிக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் அறைகூவல் விடுத்தார்.

சாய்ந்தமருது வீச் பார்க்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற ரமழான் நோன்பு திறக்கும் நிகழ்வைத்தொடர்ந்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பின் போது மேற்படி வேண்டுகோளை விடுத்தார். 

அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளின் போது தாங்கள் நேர்மை தவறி நடக்க வில்லை என்றும் அதனை அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதி உட்பட நன்கு அறிவார்கள் என்றும் அவர்களது நெஞ்சைத் தொட்டுக்கேட்க வேண்டும் நண்பகத்தன்மை என்ற விடையத்தில் அவர்களும்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று நினைத்துப்பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தேர்தல் குறித்த செய்தி கசியத்தொடன்கியத்தில் இருந்து தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம வகிக்கும் கட்சி என்ற அடிப்படையிலாவது கலந்தாலோசிக்கவில்லை என்றும் கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் இது தொடர்பில் கவலையடைந்ததாகவும் கலைக்கப்பட்ட போதும் கூட இரண்டு நாட்கள் கழிந்தும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிடம் பேசப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை அரசு வெறும் போடு காயாகத்தான் பார்க்கிறதா என சந்தேகப்பட்டதாகவும் இருந்தபோதும் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் தானாகவே வழிந்து சென்று பேசியதாகவும் இந்த விடயத்தை பகிரங்கமாக பேசுவதன் நோக்கம் அரசை விமர்சிப்பதர்க்காக இல்லை என்றும், இந்த அரசாங்கம் ஒரு கூட்டரசாங்கமாக இருந்த போதும் அந்தந்த கட்சிகளின் தலைவர்களிடம் பேசாமலேயே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அந்தந்த தலைவர்களிடத்தில் அதிர்ப்திகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு மிகுந்த நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் ஈற்றிலே அழிக்க முடியாது என்றிருந்த ஒரு பயங்கர வாதத்தை அவர் துணிவோடு அழித்ததாகவும் இதன் அணுகுமுறைகள் தொடர்பாக தங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்ததாகவும் எதிரணியில் இருந்து கொண்டு காட்டமாக தமிழ் தேசிய அமைப்புக்களின் மன உணர்வுகளுக்கு குந்தகம் இல்லாத வகையிலே தங்களது அரசியலை தாங்களது பாணியிலலேயே நேர்மையாகச் செய்ததாகவும் அழிந்த பயங்கரவாதம் குறிப்பாக வடகிழக்கு மண்ணில் முஸ்லீம்களையும் அச்சுறுத்தியதாகவும் உயிர்களையும் பலி கொண்டதாகவும் வடகிழக்கு வெளியிலும் அதன் அதிர்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றதாகவும் தற்போது தலைதூக்கியுள்ள பயங்கரவாதம் காரணமாக  வடகிழக்குக்கு வெளியில் உள்ள முஸ்லீம்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நின்மதியாக பள்ளிவாசல்களில் தொழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் புதிதாக உருவாகியுள்ள பயங்கரவாதத்தினால் தொழுகை விடையத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய பயங்கர வாதத்தை அடக்குவதற்கான எந்தவித காத்திரமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டார் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் பேசக்கூடிய ஜனநாயக உரிமையை இழந்து விட்டு இருக்க முடியாது எனவும்  குறிப்பிட்டார். மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் அரசை விமர்சிப்பது என்பதை விட இப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்ப்பதாகவே அவர் குறிப்பிட்டார்.பள்ளிவாசல்கள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் மக்களின் அதிர்ப்தியை தெரிவிக்கும் ஒரு தேர்தலாகவே இந்தத்தேர்தலை நோக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காவியுடை பயங்கர வாதத்தப் பார்த்துக்கொண்டு வாய்மூடி மௌனியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அபிவிருத்தி விடயத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு எவ்வித பங்கும் வழங்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்த போதும் கலைக்கப்பட்ட மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை எதிர்க்கட்சி உருப்பினர்களைப்போலவே நடாத்தியதாகவும் இப்படியான சூழலிலேயே தற்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிராசின் இருப்பைப்பலப்படுத்தி காட்டுவதன் மூலமாக எங்களது தயவில்லாமல் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கிழக்கு மாகாண சபையில் காட்ட வேண்டும் என்றும் கூறினார். கிழக்கு தேர்தலில் பெறப்போகும் வெற்றியே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை தலைநிமிர்ந்து செல்ல வழிசமைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழர்களின் அரசியல் எவ்வித பதவிக்கும் ஆசைப்பட்டாமல் எவ்வித அபிவிருத்திக்கும் சோரம போகாமல் அசையாத அரசியலாக உள்ள நிலையில் முஸ்லிம்களது அரசியல் இணக்க அரசியல், விமர்சன அரசியல், அபிவிருத்தி அரசியல் என எல்லாவற்றையும் கலப்படம் செய்து ஒன்றாக செய்கின்ற போது மக்களது ஆதங்கத்துக்கு விமர்சன அரசியல் செய்ய வேண்டியுள்ளது. இதனைச்செய்வதர்க்கு அங்கீகரிக்க முடியாது என்று சொல்வது ஜனநாயகமா? என கேள்வி எழுப்பினார். இதற்காகவே மக்கள் ஆணையை வேண்டி நிற்பதாகவும் குறிப்பிட்டார். வெற்றிலை சின்னத்தில் போட்டி இட பகிரத பிரயத்தனம் செய்ததாகவும் கட்சி மட்டத்திலும் உள்ளூர் போராளிகள் மட்டத்திலும்  வெற்றிலை சின்னத்தில் வரவேண்டாம் என்ற கோசம் இருந்ததாகவும் மரச்சின்னத்தில் கேட்பதற்கான முடிவை எடுத்ததன் பின்னர் அணியணியாக மக்களும் பிரமுகர்களும் கட்சியில் இணைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் கல நிலவரங்களை உணர்ந்து மாற்று நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் இசட் ஸ்கோர் விடயமாகவும் விலை வாசி அதிகரிப்பு விடயமாகவும் பேசி முஸ்லீம்களின் வாக்குகளை கொள்ளை இட முயற்சிப்பதாகவும் இதற்க்கு முஜிபுர்ரஹ்மான் உலமா காங்ரஸ் போன்றவற்றை துணைக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஹக்கீம்,மக்களின் பொதுவான கேள்விகளுக்கு பொது மேடைகளில் பதிலளிக்கும் தளமாக உபயோகிக்க உள்ளதாக்கவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேற வெளியேற வேண்டும் என சிலர் கோருவதாகவும் இவர்கள் கேட்பதர்க்கேல்லாம் அரசை விட்டு விலகப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

காலை (05.08.2012) வெளிவந்த பிரபல சிங்கள பத்திரிகையான இரிதா லங்கா தீப வில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாக கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம்,

மேற்படி செய்தியிலே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரச்சாரத்துக்கு அரசு தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்ததாகவும் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துடன் நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் இதன் பின்னணியிலேயே தனித்து போட்டி இடுவது என்ற முடிவுக்கு வந்ததாகவும் மேற்படி பேச்சு வார்த்தைகளின் போது அரசாங்கத்தை விமர்சிப்பதை தவிர்க்குமாறு சில அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதாகவும் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” என நினைத்துக்கொண்டு அது நிட்சயம் நடக்காது என அவர்களிடம் கூறியதாகவும் இருந்தபோதும் கடந்த சில நாட்களாக சுதந்திர ரீதியான சில பேச்சுக்களை பேசி வருவதாகவும் மேற்படி பத்திரிகையுடைய இன்றைய செய்தியை பார்க்கும் போது அரசாங்கம் சற்று அதிர்ந்து இருப்பதை சற்று உணர முடிவதாகவும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. அப்ப வடகிலும் கிழக்கிலும் புது முகம் எடுத்துள்ள புலி பயங்கரவாதம் வளரட்டுமா சேர்??? ஆமா உங்களுக்கு தென் இலங்கையில் ஆட்சேபிக்கபடும் பிரச்சினைகுள்ளாகும் மஸ்ஜிதுகள்தான் மஸ்திதுகளாக கண்களுக்கு படுகிறதா நல்லூரிலே உடைது நொருக்கபட்டு கோயில் கட்ட்பட்டிருக்கும் மஸ்ஜிதோ,கல்லியன் காட்டிலே உடைது நொருக்கி இராஜயோக மண்டபம் கட்டபட்டிருக்கும் மஸ்ஜித் பிர்தௌஸோ, நொச்சிமுனையில் உடைதெறியபட்டு தரிசனம் பாடசாலை கட்டபட்டிருக்கும் முகைதீன் ஜும்மா மஸ்ஜிதோ மஸ்ஜிதாக உங்களுக்கு தோன்றவில்லையா???

    இந்த கொடுமைகள் குறித்து நீங்கள் ஒரு வார்தை பேச காணோமே ஏன்? அரசுக்கு சுட்டி காட்டும் உங்களுக்கு மேலே சுட்டி காடிய மஸ்ஜிதுகள் உடபட வடகிழக்கில் பால்பட்டு மயான பூமிகளாக காட்சிதரும் 200 மேட்பட்ட பதிவு செய்யபட்ட மஸ்ஜிதுகளினதும் முஸ்லிம்களின் கலாசார மையங்களினதும் அவளம் குறித்து பேச தயக்கம் ஏன்???

    அவைகளை பால்படுத்தி இன்னும் அந்த மஸ்ஜிதுகள் மீண்டும் கட்டி எழுப்ப தடைகல்லாய் பல்வேறு ரூபங்களில் பின் புலத்தில் இருந்து தூண்டி தடைகள் போடும் தமிழ் கூட்டமைப்புக்கு இவைகளை சுட்டி காட்டி பிராயசித்தம் கேட்க நீதி கேட்க உண்மையை முகத்துக்கு நேரே சுட்டி காட்டி பேச தயக்க ஏன்???

    ReplyDelete
  2. Ithe vaartthayei rizatho,athavillaavo solli irundaal Vaai thirakka maattaar fazlin.

    ReplyDelete

Powered by Blogger.