பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழிவுச் சத்தியம் செய்வாரா..?
அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ்
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்
காத்தான்குடி காரியாலயம்
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்
காத்தான்குடி காரியாலயம்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அழிவுச் சத்தியம் செய்வதற்கான அழைப்பு
28.08.2012ம் திகதி காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாங்கள் 'தமிழீழ விடுதலைப் புலிகளின் NGO வாக செயற்படுகின்ற TROவிடமிருந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ரூபா 35 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியை பெற்றுக் கொண்டதாக மிகப் பாரிய பொய்க் குற்றச் சாட்டினை சுமத்தியிருந்தீர்கள்.
மேற்படி பொய்க் குற்றச்சாட்டானது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீது சுமத்தப்பட்ட மிகப் பாரிய பொய்க் குற்றச்சாட்டு மாத்திரமன்றி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும். இதற்கு முன்னரும் காத்தான்குடி வைத்திய சாலை அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு பொய்க் குற்றச் சாட்டுகளை தாங்கள் எம்மீது சுமத்தியிருந்ததனையும் அதனை பகிரங்க மேடைகளில் நிரூபிக்க முன்வருமாறு நாம் அழைப்புவிடுத்த போதெல்லாம் தாங்கள் பின்வாங்கிக் கொண்டதையும் இவ்விடத்தில் நாம் நினைவுபடுத்தவிரும்புகின்றோம்.
மேற்படி குற்றச் சாட்டுகளை மறுதலித்து இந்த பொய்க் குற்றச்சாட்டிலிருந்து இயக்கத்தினை விடுவித்துப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த அழிவுச் சத்தியத்தினை 31.08.2012ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மேற்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கிறோம். தாங்களும், தங்களோடு மேற்படி பிரச்சார மேடையில் அமர்ந்து இவ்விடயத்தினை ஆமோதித்த சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்துடன் மேற்படி நிகழ்விற்கு வருகை தந்து தங்களது குற்றச் சாட்டுகளை அழிவுச் சத்தியம் மூலமாக நிரூபிக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
எனவே, தாங்களும் தங்களது குடும்பமும் மேற்படி நிகழ்விற்கு உரிய நேரத்திற்கு வருகை தரவேண்டுமென அழைக்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
காத்தான்குடி.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பது அரசியலில் பால் குடிக்கும் குழந்தைகளின் கட்சியா? அரசியல் பிரச்சாரம் என்ற பெயரில் என்ன நடக்கின்றது என்ற அடிப்படை அறிவே இவர்களுக்குக் கிடயாதா?
ReplyDeleteஇதற்கெல்லாம் அழிவுச் சத்தியம் என்று இவர்கள் புறப்பட்டால், ரவூப் ஹக்கீம், அஸ்வர், அலவி மெளலானா, பெளசி, போன்ற பழுத்த அரசியல் வாதிகளுக்கு ( யார் சரி, யார் பிழை என்பதற்கு அப்பால் ) அழிவுச் சத்தியம் செய்வதற்கே உள்ள கால நேரம் போதாமல் போய் விடும்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் பூனைக் குட்டிகள் போல கண்ணை மூடிக் கொண்டு இருக்காமல், ஊடகங்களைப் பார்த்து, அரசியல் என்ற பெயரால் இந்த நாட்டில் என்னதான் நடக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்வதே நல்லது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பெயரால் எவ்வளவோ அசத்தியங்கள் அரங்கேற்றப் படுகின்றன, அவற்றுக்கு எதிராக எந்த அழிவுச் சத்திய அழைப்புக்களும் இல்லை, குறைந்த பட்சம் இவர்கள் அப்துர் ரவூபையாவது அழிவுச் சத்தியத்திற்கு எப்போதாவது அழைத்திருப்பார்களா?
La Voix அவர்களே எனக்குள் எழுந்த கருத்தை அப்படியே எழுதியமைக்கு நன்றி.அத்துடன் இலங்கை அரசியலில் உள்ளவர்களை திருடர்கள் என்போம் அதில் சில நல்ல திருடர்கள் உண்டு.!?????
ReplyDelete