அஜ்மல் கசாப்புக்கு மரணத்தண்டனை உறுதியானது
மும்பை தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோரை கொல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவரான அஜ்மல் கசாப்புக்கு மரணத்தண்டனை வழங்குவது குறித்து இன்று இறுதி முடிவு செய்தது. கசாப் நாட்டுக்கும் , மக்களுக்கும் எதிரான போர் செய்துள்ளார் என்பது நிரூபணமாகிறது. இதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. தூக்கில் விடுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவி்த்துள்ளனர்.
2008 நவம்பர் 26 ம் தேதி மும்பையில் நட்சத்திர ஓட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் உயிருடன் பிடிபட்ட ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப். இவரை பாதுகாப்பதற்கு இது வரை ரூ. 25 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் மும்பை ஜெயில் பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 5 கோடி செலவாகிறது.
கடந்த 2010 மே மாதம் 6 ம்தேதி இவக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவையும் மும்பை ஐகோர்ட் தள்ளுபடி ( கடந்த ஆண்டு அக் 10 ) செய்தது. இந்நிலையில் தனது மரணத்தண்டனை தவறானது என்றும் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்றும் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. முழுமையாக விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தனர்.
இந்தியாவுக்கு எதிரான போர்க்குற்றம் புரிந்தார் என அரசு தரப்பில் வாதிடப்பட்டாலும், இல்லை இவர் போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இவர்து தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று இவரது தரப்பில் ஆஜராகும் ராஜூராமச்சந்திரன் வாதிட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் கூறுகையில்: இந்த தீர்ப்பில் பாகிஸ்தான் தொடர்பு அதவாது தாக்குதல் சதி பாகிஸ்தானில் போடப்பட்டது என்ற ஆதாரம் கிடைத்திருப்பதாக நீதிபதிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். எனவே இந்த தீர்ப்பின் அடிப்படையில் பாகிஸ்தான், மும்பை தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனுடைய வாக்குமூலம் மனதார கெடுக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கசாப்பை விரைந்து தூக்கில் போட அரசு சட்டப்பூர்வ நடவடிக்கையை முடிவு செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள் குழந்தைகளை கொலை செய்வது இஸ்லாத்திற்கு முரணானது. குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும். அஜ்மல் கசாப் உண்மையான குற்றவாளி என்றால், சிரச் சேதம் செய்தாலும் சரிதான்.
ReplyDeleteதூக்கில் போட ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை தெரிவுசெய்வர்களோ தெரியவில்லை.
ஜனாதிபதிக்கு கருணை மனு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அஜ்மல் கசாப்பின் சட்டத்தரணி ராஜு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.