இலங்கையில் காஷ்மீர் போராளி பணம் சேகரிப்பு..? சிங்கள பத்திரிகைகள் அறிந்தால்...??
M.Asfaran
இன்று வியாழக்கிழமை சிறிது நேரத்துக்கு முன் ஊர் பள்ளிவாசலில் (காலியில் நேரம் பின்னேரம் 6.30 மணிக்கு பின்) ஒருவர் காஷ்மீர் மக்களின் உதவிக்காக பணம் சேகரித்து கொண்டு இருந்தார் .
ஒரு தனி நபர் எந்த அடிப்படியில் ஒரு சமூகத்தை பேரம்பேச முடியும்..?
நான் நினைக்கிறன் இலங்கை சட்டத்தின்படி, ஒரு வெளிநாட்டவர் அப்படி பணம் சேகரிக்க முடியாது என்று..!
அப்படி இருக்கும் போது நான் சொல்லும் குறிப்பிட்ட நபர் போலீசில் மாட்டினால் அடுத்தநாள் சிங்கள பத்திரிக்கை தலைப்பு .."காஷ்மீர் தீவிரவாதி இலங்கையில் பணம் சேகரிப்பு" என்பதாகும்..!
என்னால் எதுவித நடவடிக்கையும் அந்த இடத்தில் எடுக்கு முடியவில்லை. எதிர்வரும் நாட்களில் ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என்று எல்லா இடங்களிலும் இருந்து உண்மையாகவோ/போலியாகவோ நிதி சேகரிக்க வரலாம்..!
எனவே இதுபற்றிய முழுவிபரங்களையும் திரட்டி அவர்கள் விடயத்தில் நாம் சிறந்த முடிவை எடுப்பது நல்லது.
அவர்கள் 100 வீதம் உண்மையானவர்களாக இருந்தாலும் நிருவனமயப்படாத இவ்வாறன செயற்பாடுகளினால் பிரச்சினை முழு முஸ்லிம் சமூகத்தையும் வந்தடையலாம். முடியுமானவர்கள் இதுபற்றி உரிய இடங்களுக்கு அறிவியுங்கள்.
அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயம். கஷ்மீர் முஸ்லிம்களின் தேவை என்ன என்பதனை சரிவரப் புரியாமல், நாம் கருத்துச் சொல்ல முடியாது. கஷ்மீர் முஸ்லிம்களுக்கு உதவுவதாக இருந்தால், நிறுவன மயப்படுத்தப் பட்ட முறையில் மட்டுமே நிதி திரட்டல்கள் மேற்கொள்ளப் பட வேண்டும்.
ReplyDeleteஇங்கே குறிப்பிடப்படும் நபர், கஷ்மீரிலிருந்து அகதியாக வந்து, தனது சொந்த அடிப்படைத் தேவைகளுக்காக பணம் சேகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருப்பாரேயானால், அவரைக் குறித்து விசாரித்து விட்டு, அவருக்கு உரிய உதவிகளை வழங்கி, UNHCR இன் பொறுப்பில் ஒப்படைப்பதே நல்லது.
கஷ்மீர் மக்கள் சார்பிலோ, கஷ்மீர் போராளிகளுக்காக என்றோ நிதி சேகரிக்க தனி நபர்களை அனுமதிக்க முடியாது. தற்பொழுது கொழும்பில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் பாகிஸ்தானியர்கள் காணப்படுகின்றனர். மோசடியாக காஷ்மீரின் பெயரைப் பயன்படுத்தி பாகிஸ்தானியர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட முடியும். நாம் எச்சரிக்கையாக இருப்பது, வீணான பிரச்சினைகள் வளர்வதைத் தடுக்க உதவும், இன்ஷா அல்லாஹ்.
கிடக்குற வில்லங்கம் போதாதெண்டு, புதுசா உந்த வில்லங்கமும் வந்து சேந்துட்டுதே?
ReplyDelete