Header Ads



பேரினவாதத்துடன் குடும்பம் நடத்திவிட்டு, தமிழர்களிடம் பங்கு கேட்கும் முஸ்லிம்கள்..!

5 comments:

  1. மனோ என்னும் கோமாளியின் பிதற்றல்கள், தமிழ் கூத்தமைப்பின் கோமாளிகளின் பிதற்றல்களை விட, விஞ்சி நிற்கின்றன.

    ரவூப் ரகீம் சொன்ன முஸ்லிம் தேசியத்தை நியாயமானது என ஏற்றுக்கொண்ட மனோ, தீர்வு காணும்போது முஸ்லிம் தேசியம் மௌனமாக இருக்க வேண்டும் எனக் கேட்பது, கேலிக்கூத்து.

    சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியங்களைக் கொண்டதுதான் நமது நாடு.

    முஸ்லிம் தேசியம், ஆயுத முனையில் போராடாவிட்டாலென்ன போராடினாலென்ன ஜனாநாயகரீதியில் போராடினாலென்ன போராடாவிட்டாலென்ன சிங்களப் பேரினவாதத்துடன் குடும்பம் நடத்தினாலென்ன நடத்தாவிட்டாலென்ன, தமிழ் தேசியத்திற்கு முஸ்லிம்களைப்பற்றியோ முஸ்லிம் தேசியத்தைப் பற்றியோ கருத்து வெளியிட அருகதையில்லை.

    ஒரு நாட்டில் ஓர் இனத்தேசியத்திற்கு ஜனநாயக முறையில் தீர்வு காண விழையும்போது, எல்லா இனத் தேசியங்களின் அபிலாஷைகள், உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டும். இதுதான் நியதி.

    இது, தமிழ்த் தேசியப் போராட்டத்தில் முஸ்லிம் தேசியம் பங்கு கேட்கிறது என்ற நிலைப்பாடு முற்றிலும் தவறு.

    முஸ்லிம் கட்சிகள், அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அப்படிப் போட்டியிடுவதென்றால் கூத்தமைப்புடன் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் எனக் கோரும் அண்மைய நிகழ்வுகள் நகைப்பிற்குரியது.

    தீர்வு நிறைவேறுவதற்கு முஸ்லிம் தேசியம் வேண்டும். ஆனால், எமது உரிமைகளை கேட்காது, வாய் மூடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு.

    தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் துரோகிகள் என்று துப்பாக்கிச் சன்னங்களால் பந்தாடியவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய கூத்தமைப்பு, இன்னும் ஒருபடி மேலேபோய் முஸ்லிம் கட்சி அரசுடன் இணைந்து தேர்தலில் நின்றால், அது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்ற வர்ணிப்பு வேறு.

    முஸ்லிம் அகதிகளின் வாழ்வாதாரங்களை மறுக்கும் தமிழ் தேசியம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் தமிழ் தேசியம், வட, கிழக்கு மக்களுக்கு தீர்வு என்று வரும்பொழுது, முஸ்லிம் தேசியம் எட்ட நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு போன்ற இன்னோரன்ன நிலைப்பாடுகள், மேலும் மேலும் தமிழ், முஸ்லிம் தேசியங்களை அந்நியப்படுத்திக் கொண்டே செல்கின்றன.

    மனோ முஸ்லிம்களைப்பற்றிக் கூறிய விசமத்தனமான கருத்துக்கள் ஆச்சரியப் படக் கூடியவை அல்ல. அவை தொன்று தொட்டு தமிழ்த் தலைமைகளின் வாய்களிலிருந்து உதிரும் முத்துக்கள்.

    தற்பொழுது, நாடாளுமன்ற தெரிவுக் குழுவின்மூலம் இணைக்கப்பாடு கண்டு, தீர்வுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று எல்லாரும் ஏகமனதாக கூறி வருகின்றனர்.

    இந்த நடைமுறைச் சாத்தியம்தான் ஏற்புடையது.

    ReplyDelete
  2. ஒழித்து மறைத்தல் > நம்பிக்கையீனம் > தற்காப்புச் செயற்பாடு... இது சூழ்நிலை
    பரஸ்பர > அங்கீகாரம் > புரிந்துணர்வு > கூட்டுச் செயற்பாடு... இது தேவை
    தலைமைகள் புரிந்துகொண்டால் சரி.

    ReplyDelete
  3. தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது?

    தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது என்ற ஜனநாயக மக்கள் முன்னணியன் தலைவர் மனோ கனேசனின் வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


    நமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் பரிணாமம் மற்றும் தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்கள் எவை, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் எவை அவற்றுக்காக அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் என்ன என்ற எதனையும் புரிந்து கொள்ளாமல் திரு. மனோ கனேசன் பத்திரிகை எதனையும் படிக்காத ஒரு சராசரி பொதுமகன் போன்று கருத்துத்தெரிவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.

    முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு மட்டுமுரிய போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை. ஒரு காலத்தில் தமிழர்கள் தமக்காகவுமே போராடுகிறார்கள் எனநினைத்து அவர்களுடன் இணைந்து தமது உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்து பின்னர் தமிழ் போராளிகளாலேயே முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட வரலாறு என்பது புராதண வரலாறு அல்ல மாறாக நவீன வரலாறாகும்.

    இந்த வரலாற்று பின்னணிகள் புரியாமல் கத்துவதில் எந்த நன்மையும் விழையப்போவதில்லை. தமிழர்களுக்கான தீர்வில் முஸ்லிம்கள் எந்தவொரு பங்கையும் கேட்கவில்லை என்பதை திரு. மனோ கனேசன் போன்றோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் தாயகத்தை அதாவது முஸ்லிம் சமூகத்தையும் அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் நில புலங்களை தமிழர்களுக்கு வழங்கும் தீர்வுத்திட்டத்துக்குள் உள்ளடக்கி விட வேண்டாம் என்பதுதான் முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும். இந்த உண்மையை பகிரங்கமாக எடுத்துச்சொல்ல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் என சொல்வோர் அச்சப்பட்டாலும் நாம் இவற்றை 1990களில் இருந்தே பகிரங்கமாக எழுதி வருகிறோம்.

    வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களுக்கும், உரிர்களுக்குமான அச்சுறுத்தலை முதலில் எதிர் நோக்கியது சிங்கள பேரினவாதத்தினால் அல்ல, மாறக தமிழர் மேலாதிக்கம் காரணமாகவே என்பது புரியப்பட வேண்டும்;. சிங்கள பேரினவாதம் காரணமாக முஸ்லிம் சமூகம் இழந்ததை விட தமழ் பேரினவாதத்தினாலேயே முஸ்லிம்கள் அதிகம் இழந்தள்ளார்கள். வடக்கிலும் மட்டக்களப்பிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பல்லாயிரக்கனக்கான காணிகள் இன்னமும் மீள கையளிக்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் சுதந்திரமாக மீள குடியேறவும் முடியாமல் உள்ள சூழ் நிலையில் இதற்காக மனோ கனேசன் போன்றோர் எத்தகைய அழுத்தங்களையும் தமிழ் மக்களுக்கு கொடுக்காத நிலையில் இவற்றை மீளப்பெற சிங்கள அரசாங்கத்தையே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய துரதிஷ்டமான நிலையில் எவ்வாறு தமிழர்களின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க முடியும் என்று கேட்கிறோம்.

    தமிழ் மக்களுக்கு தனிஈழமே வழங்கப்பட்டாலும் அதற்கு முஸ்லிம்கள் தடையில்லை. ஆனால் அதற்குள் முஸ்லிம்களின் தாயகம் உள்ளடக்கப்படக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் உறுதியான கோரிக்கையாகும். ஒன்றில் முஸ்லிம்களின் தாயகம் சிங்கள அரசுடன் இணைந்திருக்க வேண்டும். அல்லது ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம்களுக்கான தனியான நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
    சிங்கள பேரினவாதத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பாரிய இன்னல்களை எதிர் நோக்கும் இன்றைய நிலையிலும் முஸ்லிம்களுக்கு வடக்கிற்கு தனியாகவும் கிழக்கற்கு தனியாகவும் நிர்வாக அலகுகளை வழங்க நாம் தயார் என எந்தவொரு தமிழ் கட்சியும் பகிரங்கமாக சொல்ல முன்வராத நிலையில் எதனை நம்பி தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் போராடுவது என மனோ கனேசன் சொல்வாரா?

    ஆகவே அதிகாரப்பகிர்வு எனும் போது முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அதிகார பிரிவு, மற்றும் வடக்கு கிழக்கில் தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மீளக்கையளிப்பு போன்றவற்றுக்கு முதலில் தமிழ் கட்சிகளிடமிருந்து பகிரங்க உத்தரவாதமும் தீர்வும் கிடைக்காத வரை முஸ்லிம் சமூகம் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக இணைந்து போராடுவது பற்றி பேசுவது தற்போதைக்கு அர்த்தமற்றதாகும் என்பதை உலமா கட்சி தெளிவாக சொல்லிக்கொள்கிறது.

    ReplyDelete
  4. ஐயா! பல விடயங்களை மறந்து விடார் போலும்.....நான் ஒரு விடயத்தை மட்டும் ஐயாவுக்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

    தமிழ் ஊடகங்கள் பற்றியவை:-
    முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் தலைவிரித்தாடியபோதெல்லாம் தமிழ் ஊடகங்கள் அவர்களுக்காகப் பாரிதாபப்படவில்லை.அநீதியை, அநியாயத்தை, அக்கிரமத்தை எதிரித்து குரல் எழுப்பவில்லை. முஸ்லிம்களும் இந்நாட்டின் தேசிய இனத்தவர்கள். நாட்டு நலன்களுக்காகப் பாடுபட்டதால்தான் அவர்கள் துன்பங்கள், துயரங்களை அனுபவிக்க நேரிட்டது. ஒரு தேசிய இனத்துக்கான செயல்பாடுகள் நிச்சயம் தேசிய பிரச்சினைகளே. ஆனால் முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் அவற்றை தேசியப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் முஸ்லிம் பிரச்சினையாகப்பார்த்து ஒதுங்கிக்கொள்ளும் நிலைப்பாட்டையே பல தமிழ் ஊடகங்கள் கடைபிடிக்கின்றன.

    காத்தான்குடியில் தொழுகையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், .ஏறாவூரில் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் அழிக்கப்பட்டனர். பொலன்னறுவை கிராமங்கள் பலவற்றிலும் நிராயூதபாணிகளான அப்பாவி முஸ்லிம்களே வதைக்கப்பட்டனர். இவை நிகழ்ந்தபோது முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பாஸிஸ புலிகளுக்குஎதிராகவும் பல ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள் எழுதவில்லை| விமர்சனம்செய்யவில்லை. முஸ்லிம்களும் தமிழைப் பேசுபவார்கள். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களோடு இணைந்து வாழ்பவர்கள். என்றாலும் முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் ஏற்பட்டபோது அவர்களுக்காக இரக்கப்பட, பேச தமிழ் ஊடகங்கள் முன்வரவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் தமிழ் ஊடகங்கள் மௌன விரதம் பூண்டிருந்தன.

    தொடர்ந்து முஸ்லிம்களின் விவகாரங்களில் தமிழ் ஊடகங்கள் பாரபட்சம் காட்டின. மனிதாபிமானத்தின் பெயராலோ, ஊடக தர்மத்தின் அடிப்படையிலோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தமிழ் ஊடகங்கள்பேசவில்லை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தட்டிக் கேட்கவோ, உலகுக்குபிரசாரம் செய்யவோ தமிழ் ஊடகங்கள் முன்வரவில்லை.

    இவ்வளவுக்கும் தமிழ் ஊடகங்களின் வாசகர்களாக - நேயர்களாக இருப்போர்கல் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே. நூலகத்தில் வாசிகசாலையில் ஓஸியில் பத்திரிகை வாசிப்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல. காசு கொடுத்து விலைக்கு வாங்கி பத்திரிகை படிக்கும்பழக்கத்தைக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். என்றாலும் தமிழ் ஊடகங்கள் இனவாதமாக எழுதின| செயல்பட்டன. தேசிய பிரச்சினைகளை அவை குறுகிய கண்ணோட்டத்திலேயே நோக்கின. அநீதிக்கு, அக்கிரமத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பின. பயங்கரவாதத்துக்குப் பக்கபலமாக நின்றன. இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் ஐயா.

    அபு மர்வான்
    அக்கரைப்பற்று

    ReplyDelete
  5. எங்களுக்கு முதல் முக்கியம் ஐக்கியபட்ட தேசமே தேசம் இருந்தாலே தேசிய இனங்கள் தனித்துவமாக வாழமுடியும் எள்ளாலன் முதல் சம்மந்தன் வரை ஏன் மனோகனேசன் என்ற தமிழர் கூட இந்த நாட்டை தன் சொந்த நாட்டை அந்நிய நாடுகள் முன்னே இழிவுபடுத்தவும் காட்டி கொடுக்கவும் அந்நியநாட்டின் கைபொம்மையாக நவீன கால்நித்துவதை நிறுவவுமே அரசியல் செய்கின்றனர் இப்படிபட்டவர்களுக்கு தேசமும் தேச அபிமானமும் என்றால் என்ன என்று விளங்குவது கஷ்டந்தான்


    புலிகள் தோற்றதும் பிரிவினை தோற்றதும் தமிழர் போராட்டம் தோற்றதும் அடுத்த இனதை அநியாயமாக ஆக்கிரமித்ததினாலேயே முஸ்லிம்களின் சொத்துகளுக்கு வாழ்விடங்களிட்கோ முஸ்லிம்களின் கல்வி பொருளாதார உயர்வுக்கோ தமிழரும் தமிழ் தீவிரவாத போராளிகளும் நாசம் செய்திருக்க வில்லையெனில் இன்னேரம் தமிழ் தேசியம் சந்தோசிக்கும் தீர்வுகிட்டி இருக்கும் இழந்ததைவைத்து இன்னும் பாடம் படியாது மனோவைபோல் தேசதை காட்டி கொடுக்கும் வேளையில் முஸ்லிம்களும் இணைய வேண்டுமென வெக்கம் இல்லாமல் பேசிகொண்டும் நாட்டை அந்நியர்களுக்கு காட்டி கொடுத்துகொண்டும் இருந்தால் நாசமாகி சீரழிவது மனோவினதும் அவ்ர் இனத்தினதும் சந்ததிகளே

    முஸ்லிம்களுக்கு எப்படி போராடி எப்படி பெரும்பான்மை இனதின் மனதை வெண்று வாழவேண்டும் சுய மரியாதையுடன் என்பது நன்குதெறியும் 2,000 வருடங்களாக சுபீட்சமான ஐகியதுடன் பெரும்பான்மை மக்களுடன் வாழும் முஸ்லிம்கள் இனியும் வாழ வழி சமைபார்கள் தேவையில்லாமல் முஸ்லிம்களை பற்றிய அ,,ஆ கூட தெறியாத மனோ வாயை பொத்திகொண்டிருப்பது நல்லது


    தேசதை காடி கொடுத்தே வாழும் தமிழரின் அரசியலும் தேசதிட்காக உயிரையும் கொடுக்க முனையும் முஸ்லிம்களின் அரசியலும் ஒரு நாளும் ஒன்றாக பயணிக்க முடியாது தமிழர்களுக்கு தேவையெனில் அவர்கள் அவர்களுக்கான தீர்வை அவர்களின் மக்களை ஆளவும் நிர்வகிக்கவும் ஆட்சி செய்யவும் அதிகாரம் செழுத்தவும் கோரட்டும் முஸ்லிம்களின் வளங்களையோ முஸ்லிம்களையோ முஸ்லிம்களின் பாரம்பரிய பூமிகளையோ ஆளவோ ஆட்சி செய்யவோ ந்ரிவகிக்கவோ அதிகாரம் செழுத்தவோ தமிழ் அரசியல் வாதிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது அப்படியான வர்களின் நினைபே இவ்வளவு தூரம் அவர்களின் புலப்பை கெடுஹ்த்டு சந்தியில் நிட்க வைதிருக்கிறது இனியும் ஜுஸ்லிம்களி சீண்டினால் இதைவிட கேவளமான நிலைலைதான் எஞ்சி இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.