முஸ்லிம் செயலகம் விடுத்துள்ள அறிக்கை..!
மீண்டுவரும் முஸ்லிம் மீனவர்களின் மனக்குறைகள், சட்டநிலைத் தகவுள்ளவையென்றும், அவற்றுக்குத் தீர்வுகள் அவசியமென்றும் முஸ்லிம்களுக்கான செயலகம் நம்புகின்றது. ஆயினும் இந்த மனக்குறைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு வன்செயலைப் பயன்படுத்துவதை நாம் கண்டிக்கின்றோம். அதேவேளையில் தனிப்பட்ட அரச அதிகாரிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர் என்னும் சார்த்துதல்கள் உள்ளிட்டவகையில், ஆர்ப்பாட்டத்தைக் கையாளுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாம் ஆழமாக விசனம் அடைகின்றோம்.
வன்செயல் நிகழ்வுகள், பயமுறுத்தல் குறித்த சார்த்துதல்கள் மற்றும் அடிப்படையான பிரச்சினைகள் கையாளப்பட்ட விதம் உள்ளிட்டவகையில் மன்னாரில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முஸ்லிம்களின் செயலகம் ஆழ்ந்த விசனம் அடைகின்றது.
முஸ்லிம்களுக்கான செயலகம் (SFM) நீதித்துறையின் சுதந்திரத்தையும், எமது நீதிமன்றங்களின் நேர்மைத்திறனையும் மதிப்பதற்கான தேவையை உறுதிப்படுத்துகின்றது. சமீப வருடங்களில் நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் சவால்களை நோக்கும்போது நாம் நீதி முறைமையின் சுயாதீனத்தை மதிப்பதும், அது அரசியல்மயப்படுத்தப்படுவதையும், அதன் கருமப்பாட்டில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதையும் கண்டிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். மன்னாரில் சமீபத்தில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையிலுள்ள அமைச்சர் ஒருவருக்கெதிராகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அமைச்சர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆகவே, சார்த்துதல்கள் சம்பந்தமான ஆவுகளை நாம் வரவேற்பதோடு, தலையீடுகளற்றதும், சம்பந்தமுற்ற தரப்புகள் அனைவரதும் கருத்துகள் செவிமடுக்கப்படுவதுமான ஒரு நியாயமான செயல்முறை வேண்டுமென்று நாம் கோருகின்றோம்.
மேற்கூறிய சார்த்துதல்கள் மற்றும் விசாரணைகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில், மன்னாரிலுள்ள மோதல் முரண்பாட்டுக்குத் தனியாகத் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் குறித்து SFM கவனத்தை ஈர்க்க விரும்புகின்றது. தற்போதுள்ள முக்கியமான பிரச்சினைகள் இடம்பெயர்ந்தோர் திரும்பிவந்து மீளக்குடியேறியிருப்பதும், 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் ஜன சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மீட்டெடுப்பதுமாகும்.
குறித்துரைப்பாக, யுத்தத்தினால் பாதிப்புற்ற ஏனைய ஜனசமூகங்களினது உரிமைகளும், தேவைகளும் மதிக்கப்பட்டுத் தீர்வுகாணப்படும் அதேவேளையில், வடக்கில் வாழும் முஸ்லிம்கள் நிலைபேறான வகையில் திரும்பி வருவதை உறுதிசெயும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். கோந்தாப்பிட்டி துறைமுகத்தில் மீன்பிடிக்கும் உரிமை சம்பந்தமாக உப்புக்குளம் மீனவர்களுக்கும், விடத்தல்தீவு மீனவர்களுக்குமிடையிலான பிணக்கு, வடக்கின் முஸ்லிம்கள் திரும்பிவந்து, தமது காணிகளைப் பெற்றுக்கொண்டு, வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பல்வேறு பிணக்குகளில் ஒன்று மாத்திரமேயாகும். SFM மீண்டுவரும் முஸ்லிம் மீனவர்களின் மனக்குறைகள், சட்டநிலைத் தகவுள்ளவையென்றும், அவற்றுக்குத் தீர்வுகள் அவசியமென்றும் நம்புகின்றது. ஆயினும் இந்த மனக்குறைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு வன்செயலைப் பயன்படுத்துவதை நாம் கண்டிக்கின்றோம். அதேவேளையில் தனிப்பட்ட அரச அதிகாரிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர் என்னும் சார்த்துதல்கள் உள்ளிட்டவகையில், ஆர்ப்பாட்டத்தைக் கையாளுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாம் ஆழமாக விசனம் அடைகின்றோம்.
இப்பிணக்கைப் போலவே, மன்னாரிலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் காணி மற்றும் மீன்பிடி உரிமைகள் சம்பந்தமான ஏனைய பிணக்குகள் உள்ளன. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சன்னார் என்னும் கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காணிப்பிணக்கு மேலுமோர் உதாரணமாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையால் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்துவிட்டது.
முஸ்லிம்கள் தீவிர பாதிப்புக்குட்படுத்தப்பட்டதும், கணிசமான குடிசனப் பரம்பல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதுமான ஒரு பிரதேசத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் விட்டுச்சென்ற அயலவர்களிலும், அயற் பிரதேசங்களிலும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெளியேற்றத்துக்கு முன்னர் நிலவிய சுமுகமான உறவுகள் பல இடங்களில் இப்பொழுது பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்று இயற்கையான ஜனப்பெருக்கம் காரணமாகக் கூடுதலான எண்ணிக்கையிலான வடபகுதி முஸ்லிம்கள் திரும்பிவர விரும்புவதோடு, இவர்கள் அனைவருக்கும் காணி வழங்குவதும் பெரும் பிரச்சினையாகவுள்ளது. இருபது வருடங்கள் கழிந்தநிலையில் வடபகுதி முஸ்லிம்கள் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் திரும்பி வருவது தமிழ் சமூகத்தின் சில பிரிவுகளால் ஓர் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.
இவ்வாறு இவர்கள் திரும்பி வருவது தடுக்கமுடியாதவகையில் வடக்கின் சமூக ஏற்பாடுகள், குடிசனப் பரம்பல் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கவேசெயும். ஆரம்பத்திலாவது இடர்கள் மற்றும் அரிதான வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் முரண்பாடுகள் ஏற்படும். இவற்றுக்குத் தீர்வுகள் காணப்படவேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் இரண்டுமே மீள்குடியேற்ற உதவிகளுக்கு உரிமையுள்ளவை என்பதையும், சகல சமூகங்களினதும் மீள்குடியேற்றம் நிலைபேறானதாகவும், நீண்டகால நோக்கில் சகவாழ்வை உறுதிசெவதாகவும் அமைவதை உறுதிசெவது அரசினதும், இரு சமூகங்களின் தலைவர்களினதும் கடமையென்பதையும் SFM வலியுறுத்துகின்றது. மீள்குடியேற்றம் சம்பந்தமான கக்ஷ்டமான பிரச்சினைகளை இந்த வரலாற்றத் திருப்புமுனையில் இரு இனத்துவக் குழுக்களுக்குமிடையிலான போட்டியாக மாற்றுவது மிகவும் துன்பகரமான தவறாகும்.
நிலைபேறான மீள்வருகையும், சகவாழ்வும் யதார்த்தமாக வேண்டுமெனில், வடபகுதி முஸ்லிம்களும், சமூகத்தின் தலைவர்களும் அவர்கள் வெளியேற்றப்பட்டு இருபது வருடங்கள் கடந்துவிட்டன என்பதையும், வடக்கில் யதார்த்த நிலைமைகள் மாறியுள்ளன என்பதையும் கருத்தில்கொள்ளுதல் வேண்டும். ஆகவே, கடந்துபோன காலம், ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் சம்பந்தமான உணர்திறன் மிகமிக அவசியமாகும். அதேவேளையில் தமிழ் சமூகத்தின் தலைவர்கள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் திரும்பிவர விரும்பும்போது அவர்களுக்கு உதவவேண்டு மென்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் விடுதலைப் புலிகள் அமைப்பின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை தவறுகள் காரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டுவிடும். தமது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தவிர்க்கமுடியாதவாறு திரும்பி வருவார்கள் என்பதையும், இழந்த வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு மீண்டும உரிமை கோருவார்கள் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஆகவே, அத்துமீறல் செயப்பட்ட காணிகளும், எடுத்துக்கொள்ளப்பட்ட மீன்பிடிப் பிரதேசங்களும் வடபகுதி முஸ்லிம்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படுதல் வேண்டும். இத்தகைய சோத்துகளை மீள ஒப்படைப்பதால் பாதிப்புறுவோருக்கும் தீர்வுகள் வழங்கப்படுதல் வேண்டும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளும், போர்க்காலங்களில் காணி மற்றும் ஏனைய வளங்களை மீள்பகிர்வுசெத அரசியல்வாதிகளினதும் ஏனைய செயற்பாட்டாளர்களினதும் நடவடிக்கைகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. வடபகுதி முஸ்லிம்கள் பல வருடகாலப்பகுதியில் தமது சோத்துகளை உத்தியோகபூர்வமாகவும், அவ்வாறில்லாமலும் தமிழர்களுக்கு விற்றும், குத்தகைக்கு வழங்கியுமுள்ளனர். சிவில் நிர்வாகம் இத்தகைய பிணக்குகளுக்கு மத்தியஸ்தம் செவதில் அரசியல்வாதிகள், மாவட்ட மட்டத்திலான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஜனசமூகத் தலைவர்களுடன் ஒத்துழைப்பு அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். கோந்தாப்பிட்டிச் சம்பவத்தின்போது இத்தகைய முயற்சியொன்று அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆயினும் தீர்மானங்கள் பயனுறுதியுடனும், உரிய காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படாததால் நிலைமை தீவிரமடைந்ததாகவும் தோன்றுகின்றது. மன்னாரிலுள்ள முக்கிய அரசியல் பிரதிநிதிகளுக்கும், சிவில் சமூகத் தலைவர்களுக்கும் பிணக்கு மத்தியஸ்தம் மற்றும் பதற்றத் தணிப்புச் செயற்பாடுகளில் அனுபவம் குறைவென்பதும் வெளிப்பட்டது.
நீண்டகால மோதல் முரண்பாடு நாடு முழுவதிலும் ஜனசமூகங்களைத் துருவப்படுத்தி, இனத்துவ உணர்வுகளைக் கடுமையாக்கியுள்ளது. விசேடமாக யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கில் இதுவே உண்மை நிலையாகவுள்ளது. இத்தகைய ஒரு சூழமைவில், முஸ்லிம்கள் உத்தியோகபூர்வ மட்டத்தில் பாரபட்சங்களைக் காண்பதோடு, அனுபவித்தும் வருகின்றனர். மாவட்ட மட்ட நிர்வாகம் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவகையில் அரச கட்டமைப்புகளில் அரசியல்மயமாக்கம், மற்றும் இனத்துவமயமாக்கம் என்பவைகுறித்துப் பலர் விசனமடைந்துள்ளனர். அரசு இதைக் கவனத்திலெடுத்துத் தீர்வுகளைக் காணுதல் வேண்டும். தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் முஸ்லிம்களின் திரும்பிவரும் உரிமையை அங்கீகரிப்பது உள்ளிட்டவகையில், வடபகுதி முஸ்லிம்களின் கரிசனைக் கவலைகளைப் பாரதூரமாகக் கருத்திற்கொண்டு, பாரபட்சம்குறித்த முஸ்லிம்களின் பார்வை சம்பந்தமான தீர்வுகளை முன்வைக்கவேண்டிய காலம் எழுந்துள்ளது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க நிர்வாகம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. இனத்துவமயப்படுத்தப்பட்டுள்ளது. வடபகுதி முஸ்லிம்களுக்கு மாத்திரம் உதவிகள் வழங்கப்படுகின்றன போன்ற சிந்தனைகள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்துக்குப் பிந்திய சூழமைவில் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல ஜனசமூகங்களுக்கும் ஒப்புரவானமுறையில் உதவிகள் வழங்கப்படுவது தீர்மானகரமானதாகும். சகல சமூகங்களுக்குமான மூலவள ஒதுக்கீடுகளை மீளாவுசெவதற்கும், மேம்படுத்துவதற்குமான முயற்சி அவசியமாகும்.
கஷ்டமான மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு இனத்துவச்சாயம் பூசப்படுவதைக் குறைப்பதற்குச் சம்பந்தமுற்ற சகலரும் பணியாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். மீளிணக்கம் சம்பந்தமாக அதிகம் பேசப்பட்டபோதிலும், மேலே குறிப்பிடப்பட்டவை உள்ளிட்டவகையில் அரசினாலும், அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களாலும் பொருண்மை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், ஜனசமூகங்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு சகவாழ்வு மற்றும் நிரந்தர சமாதானத்துக்கான வாப்புகள் வலுப்படுத்தப்படுவதை உறுதிசெவதும் அவசியமாகும்.
Post a Comment