நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தேர்தல் பிரச்சாரத்தில் வன்முறை பிரயோகிப்பு
மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நடாத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையை பிரயோகித்துள்ளனர். இதையடுத்து குறித்த பிரச்சார கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்க மூதூர் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வன்முறை மேற்கொண்டவர்கள் குறித்து இருவேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களே குழப்பியதாக சில தரப்புகளும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களே குழப்பியதாக மற்றும் சில தரப்புகளும் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment