புத்தரின் எலும்பை கண்காட்சிக்கு வைத்து அரசாங்கம் வாக்கு கேட்கிறது - ஐதேக
AD
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் எலும்பை வைத்து அரசாங்கம் இம்முறை தேர்தல் பிரச்சாரம் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு தேர்தல் தொனிப்பொருள் ஒன்று இல்லாததால் புத்தரின் எலும்புகளை காட்டி மக்களிடம் வாக்கு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் எலும்பு தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் மாத்திரம் கண்காட்சிக்கு வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தேர்தல்களில் யுத்த வெற்றியை தேர்தல் பிரச்சார தொனிப்பொருளாகக் கொண்ட அரசாங்கம் இம்முறை தொனிப்பொருளின்றி புத்தரின் எலும்பை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆட்கள் புத்தர்ற எலும்பைக் காட்டி சனத்த ஏமாத்தினம்.
ReplyDeleteஇன்னும் கொஞ்சப் பேர் "அல்லாஹ்வின் பெயரால்" சனத்த எமத்தினம்.