இலங்கை வருகிறது ஐ.நா. மனித உரிமைகள் குழு - முஸ்லிம் சமூகம் பயன்படுத்துமா..?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.
செப்ரெம்பர் 14ஆம் திகதி இலங்கை வரும் இந்தக் குழு ஆறு நாள்கள் தங்கியிருந்து கொழும்பில் அரச, எதிர்க்கட்சி மற்றும் தமிழ்க்கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைப் பயணம் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் இந்தக் குழு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
செப்ரெம்பர் 14ஆம் திகதி இலங்கை வரும் இந்தக் குழு ஆறு நாள்கள் தங்கியிருந்து கொழும்பில் அரச, எதிர்க்கட்சி மற்றும் தமிழ்க்கட்சித் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைப் பயணம் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் இந்தக் குழு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் குழுவுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய, பசுபிக், மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க பிரிவுகளுக்குப் பொறுப்பான தலைவர் ஹன்னி மெகாலி தலைமையேற்கிறார். இவருடன்களச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கான பிரிவின் மூத்த அதிகாரி அஸ்ரா பெட்ராவும், மேலும் சில உயர்நிலை அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் மிகமுக்கியமான இந்த குழு முஸ்லிம்களை சந்திக்குமா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் மாற்றுக் கருத்துக்கள் நிலவினாலும், இந்தக் குழு இலங்கை வரும்போது முஸ்லிம் சமூகம் தான் கடந்த காலங்களில் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்களை இந்தக் குழுவிடன் சகலவித ஆதாரங்களுடன் முறையிட வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுடைய மனித உரிமை மாத்திரம்தான் மீறப்பட்டுள்ளது என சர்வதேசம் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தினதும் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளனர். தற்போதுவரை முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுரிமைக்கு ஏற்பட்டுள்ள சவால் மற்றும் வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசத்தில் மீளக்குடியேற ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வருவது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மீறப்பட்ட மனித உரிமைகளை உரியவகையில் முறைப்பாடு செய்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் சார்பு ஊடகங்களும் அதீத கவனம் செலுத்துவது அவசியமென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!
Post a Comment