'ஜப்பான் கனவு' குறித்து பொலிஸார் எச்சரிக்கை
போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்து ஆட்களை ஜப்பானுக்கு அனுப்பும் பாரிய சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான பிரதான சந்தேக நபர் நேற்று பேலியகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் ஜப்பானுக்கு சென்ற 9 பேர் வரை போலியான வீசா அனுமதி பத்திரத்தை வைத்திருந்த நிலையில், மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். ரகசிய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த பாரிய ஆட்கடத்தல் நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜப்பான் தூதுவராலயத்தின் ஊடாக செல்லாமல் சட்டவிரோதமான முறையில் ஜப்பான் சென்று திருப்பியனுப்பப்பட்டவர்கள் இருந்தால் 011 22 531 74 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிடுமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளர் கோரியுள்ளார்

Post a Comment