பா.சிகான்
ரமழான் மாதத்தை முன்னிட்டு செரண்டிப் அமைப்பினால் யாழ் முஸ்லிம்களுக்கு உலருணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எம் சுபியான் மௌலவி கலந்து கொண்டார்.இதில் 300 மக்கள் உலருணவுப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
மேற்படி நிகழ்வினை யாழ் முஸ்லிம் வட்டாரத்தில், தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது, தகவல் வழிகாட்டல் மத்திய நிலையத்தின் தலைவர் சகோதரர் நிபாஹிர், மற்றும் சூறா சபை அங்கத்தினர்களான சகோதரர் அஜ்மல், சகோ றிகாஸ் சகோ.அஷ்கர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர், குறித்த விபரம் இந்த செய்தியுடன் இணைத்துக்கொள்ளப்படுவது சிறந்தது.
ReplyDeleteநன்றி
வீடு வீடாக சென்று கொடுக்கப் பட வேண்டிய உதவிகளை மேடை போட்டு கொடுப்பதன் ஊடக இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன. யாழ் முஸ்லிம்களை தொடர்ச்சியாக பிச்சைக் காரர்களாக காட்டுவத இவர்களது வேலை. விளம்பரம் தேடும் எண்ணத்துடன் ரமலான் மாதத்தில் பெண்களை மேடைக்கு அழைத்து அவர்களது பொருளாதார நிலைமையை உலகுக்கு கட்டும் இன்த மடமைத் தனம் எப்போது இந்த சமுதாயத்தை விட்டு நீங்கும். தெருக்களில் பத்து கிலோ அரிசியை தூக்கிச் செல்ல முடியாமல் வயதான பெண்கள் பட்ட வேதனை விளம்பரம் தேடும் இவர்களுக்கு விளங்குமா?
ReplyDeleteஇதே போன்று தான் முன்பு பேரித்தம் பழத்தையும் அ கார்ட் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்குவோம் எனக் கூறி பணிமனைக்கு வரவழைத்தனர். இவையெல்லாம் வீடு வீடாக சென்று இஹ்லாசுடன் வழங்க வேண்டிய உதவிகள். யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள குடும்பங்களில் ஒரு சிலரை கையேந்திகளாக சித்தரித்து காட்டுவது தவறான செயட்பாடாகும் . இதனால் இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எதிர்கால திருமண பந்தங்கள் பாதிக்கப் படலாம். சமூகத்தில் இவர்களின் அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படலாம்.
1990 இக்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கொடுத்து வாழ்ந்தவர்கள். பொருளாசை காட்டி அவர்களை மேடைக்கு அழைத்து அவர்களை கையேந்திகளாக உலகுக்கு காட்டாதீர்கள்.
உதவி செய்யுங்கள் . தயவு செய்து விளம்பரம் தேடாதீர்கள்.