Header Ads



அரசாங்கத்திற்கு 80 சதவீத முஸ்லிம்கள் வாக்களிப்பர் - அமைச்சர் பௌஸி


ஸாதிக் ஷிஹான்

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் 80 வீதமான முஸ்லிம்கள் இம்முறை அரசாங்கத்திற்கு வாக்களிக்கப் போவது உறுதி என்று நகர அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான சகல விதமான வசதிகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுத்த அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கமே என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம் பெற்றது. அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி மேலும் உரையாற் றுகையில்,

சிலர் இனவாதத்தை காண்பித்து வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக் கின்றனர். எவர் எதனை சொன்னாலும், எவற்றை காண்பித்தாலும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ள போவதில்லை.mஇன்று நாட்டு மக்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்பதையும், இதனை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி அவர்களும் அவரது தலைமையிலான அரசாங்கமும் என்பதை கிழக்கு மாகாணம் உட்பட நாடு முழு வதிலும் உள்ள முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்பொழுது முஸ்லிம்களின் வாக்கு பலம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. அம்பாறை, கல்முனை பிரதேச தேர்தல் நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்தை தெளிவுபடுத்தும், அவர்களை இணைத்தும் கொள்ளும் விடயங்களுக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளேன்.

இம்முறை முஸ்லிம்கள் சு. கா. வுக்கு அதிக வாக்குளை வழங்கி மேலும் பலப்படுத்த தயாராக உள்ளனர் என்பது நான் மேற்கொண்ட விஜயத்தின் போது காணக் கூடியதாக இருந்தது. முஸ்லிம் சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ள அரசாங்கம் முஸ்லிம்களின் எஞ்சியுள்ள குறைபாடுகளையும் அரசின் ஊடாக நிச்சயம் செய்து கொள்ள முடியும் என்றார்.





1 comment:

  1. Aanaal Mun irunthathai vida nilamai moasamaaha poikittirukkintrathu. ethirhaalathil muslimkale irukka mudiyaamal poahum poala irukkintrathu. Allah poathumaanavan. Yaa Allah ellorukkum nalla arivai thaa yaa Allah. kandathatkellam vilai poahaamal aakku Yaa Allah.

    ReplyDelete

Powered by Blogger.