Header Ads



யாழ்ப்பாண மக்கள் வங்கியில் 7 கோடி ரூபா மோசடி

AD

மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை மோசடி செய்துள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வங்கிக் கிளையில் நேற்று முன்தினம் கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றபோதே, குறித்த மோசடி தெரியவந்துள்ளது.  அதனை தொடர்ந்து சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் உயர் அதிகாரி மஹிந்த வைத்தியதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் காரணமாக காணாமற்போன நகை மற்றும் பணத்தின் பெறுமதியை தற்போது உறுதியாக கூற முடியாதுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.