வாகன விபத்தில் வபாத்தான 6 பேரின் ஜனாஸாக்கள் கல்முனைக்குடியில் நல்லடக்கம்
நிந்தவூர் வாகன விபத்தில் வபாத்தான ஆறு பேரின் ஜனாஸா நல்லடக்கங்களும் புதன்கிழமை காலை கல்முனைக்குடி முஸ்லிம் மையவாடியில் நடைபெற்ற போது ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இவர்களது ஜனாஸாகள் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கல்முனைக்குடி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதனுடன் சம்பந்தப்பட்ட பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
வபாத்தான இக்குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் சவூதியில் தொழில்புரிகிறார். சவூதியிலிருந்து விடுமுறையில் வந்துள்ள ஒருவர் பாலமுனையில் சில நாட்கள் தங்கியிருந்தார். இவர் மீண்டும் சவூதிக்குப் புறப்படவிருந்தார். அவரிடம் பொதியொன்றை ஒப்படைத்து சவூதியில் உள்ள தமது உறவினரிடம் சேர்ப்பிப்பதற்காகவே இக்குடும்பத்தினர் பாலமுனைக்குச் சென்றனர்.
சவூதிக்குப் புறப்படவிருந்தவரிடம் பொதியை ஒப்படைத்து விட்டு இக்குடும்பத்தினர் மீண்டும் கல்முனைக்குடியை நோக்கித் திரும்புவதற்காகப் புறப்பட்ட போது நேரம் இரவு சுமார் 8.15 மணியாகி விட்டது.
பாலமுனையிலிருந்து சிறுவர்கள் இருவர், சாரதி உள்ளடங்கலாக இவர்கள் ஆறு பேரும் ஆட்டோவில் கல்முனைக்குடியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை யில், ஆட்டோவுக்குப் பின்னால் பயணிகளுடன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
மேற்படி சொகுசு பஸ் வண்டி அக்கரைப்பற்றில் இருந்து பயணி களுடன் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இப் பஸ்வண்டி நிந்தவூர், காரைதீவு, கல்முனை, மட்டக்களப்பு, பொலனறுவை மார்க்கமாக கொழும்பு செல்லவிருந்தது.
Post a Comment