தீகவாபிக்கு 650 மில்லியன் ஒதுக்கீடு - சவூதி வீடமைப்பு திட்டமோ புறக்கணிப்பு
அஸ்ரப் ஏ சமத்
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நிர்மாணிக்கப்பட்ட சவுதி வீடமைப்புத்திட்டத்தினை ஐனாதிபதியை அழைத்து அதனை உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே என சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை தீகவாபி பிரதேசத்திற்கு நேற்று (26)ம் திகதி ஐனாதிபதி மஹிந்த ராசபக்ச நேரடியாக விஜயம் செய்து உடனடியாக 650 மில்லியன் ருபாவை தீகாவாபி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அத்துடன் அப்பிரதேசத்தினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் புனித பூமி திட்டத்தின் கீழ் அமுல்படுத்தி தீகவாபி பிரதேசத்தினை பாதுகாத்து அப் பிரதேசத்தில் செய்யப்பட உள்ள சகல வேலைத்திட்டத்திற்கு தடையாக உள்ள தடைகளை நீக்கி உரிய சட்ட நடிவடிக்கை எடுத்து அதனை அமுல்படுத்துமாறு அதிகாரிகளை ஜனாதிபதி பணித்துள்ளார்.
தீகவாபி பெரேகரா பவணி செல்லக்கூடிய வகையில் தீகவாபி வரப்பத்தான் சேனை பாதை அபிவிருத்திக்கு 400 மில்லியன் ருபாவும் மற்றும் தீகவாபி பண்சலை முகப்புக்கு 250 மில்லியன் ருபாவும உடனடியாக ஐனாதிபதி; ஒதுக்கியுள்ர் தீகவாபி தேரர் நனபுரவசிறி புத்திக்க தீகவாபி சம்பந்தமாக ஐனாதிபதி யிடம் கலந்துரையாடினார். அமைச்சர் பி.தாயாரத்தினவும் கலந்து கொண்டார்.
ஆனால் அம்பாறை-அக்கரைப்பற்று வீதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி ஆரேபியா அரசு 500 கோடிருபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள் பாடசாலை வைததியசாலை பொது சந்தை போன்ற வீடமைப்பைத்திட்டத்தினை பகிர்ந்தளிப்பதற்கு இப்பிரதேசத்தின் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஐனதிபதியை அழைத்துச் செல்லவில்லை.
இவ்வீடமைப்புத்திட்டத்தினை வீடுகள் இல்லாமால் அகதிமுகாம்களில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிந்தளிப்பதற்கு உரிய நடவடிக்கையை ஐனாதிபதி ஊடாக எடுக்கவில்லையே என சுனாமியினால் பாதிக்கப்பட்ட மருதமுனை கல்முனை சாய்ந்தமருது அக்கரைப்பற்று மக்கள் மிகவும் அங்கலாயிப்பதுடன் அரசில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை விமர்சித்தவர்களாகவும் உள்ளனர்.
சவூதி காசுல கட்டுன வீடு நமக்கு வேணாம், அதவிட ஜனாதிபதியார் தீகவாபிக்கு காச குடுக்கட்டும் எண்டு நம்மட அமைச்சர் புள்ளிக நெனச்சன்களோ தெரியல்ல.
ReplyDeleteYou mean the people are blaming all the government ministers including Rauff Hakeem?
ReplyDeleteபேரியல் அஷ்ரப் வீட்டுத்திட்டம் திறக்க வந்தபோது, எனது எல்லைக்குள் இன்னொருவரா? என்ற காழ்ப்புணர்வில் தீகவாபி குமாரவைத் ”தூண்டி” விட்டு டயர் எரிச்சு, தோரணம் உடைச்சு, வாகனம் சேதமாக்கிய அதாஉல்லாவைச் சொல்லணும். 500 ஏழைக் குடும்பங்களின் பதுவாக்கள் காத்திருக்கின்றன.
ReplyDelete