வானொலியில் 5 தடவைகள் அதான் சொல்ல அனுமதி வழங்கியவர் மஹிந்தவே
வடக்கிலும்,கிழக்கிலும் வாழும் சமாதானத்தையும்,சௌஞன்யத்தையும் விரும்பும் மக்களை மீண்டும் இந்த மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கான சதிகள் இத் தேர்தலில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதும்,அதனது ஆதரவு எச்சங்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்; சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அமீர் அலி,ஷிப்லி பாருக்,எம்.சுபைர் ஆகியோரை ஆதரித்து காத்தாண்குடியில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தலைவர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு உரையாற்றும் போது,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் பள்ளிவாசல்களில் பங்கு சொல்ல முடியாது எனவே ஜனாதிபதி தேர்தலில் அவரை படுதோல்வி அடையச் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரசாரம் செய்தனர். பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி இலங்கை வானொலியில் ஒரு நாளைக்கு 5 தடவைகள் அதான் சொல்லுவதற்கான அனுமதியினை வழங்கினார். இது போன்று தான் தம்புள்ள பிரச்சினைக் குறித்து சர்ச்சை எழுந்த போதும்,நாங்கள் அங்கு சென்று எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தோம்.அதன் பின்னர் எமது கட்சியினை சேர்ந்த பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா சென்று பல முயற்சிகளை செய்தார்.இன்று அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை செய்து வருகின்றது. காவியுடை பயங்கரவாதம் என்று ஒட்டு மொத்த பெரும்பான்மை சமூகத்தினை அவமதிக்கும் கருத்துக்களை கூறியது மட்டுமல்லாமல்,அதற்கு பகிரங்க மன்னிப்பும் கோறியதன் மூலம் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் சர்ச்சையினை தோற்றுவித்துள்ளார். ஏன் இந்த சிறுபிள்ளை தனமான அரசியல் செயற்பாடுகள்,உண்மையினை பேசி அரசியல் செய்தால் இவ்வாறான பொய்யான விடயங்களை கூற வேண்டி யேற்பட்டிருக்காது.
இன்று வடக்கில் வாழும்,மீள்குடியேறிவரும் முஸ்லிம்களை வெளியேற்றும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாம் வாழ்ந்த பூமியில் அவர்கள் வாழ்வதற்கு இடமில்லை என்றால் அம்மக்களின் நிலையென்ன? இதை தான் இன்று கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் செய்யப் போகின்றது. பிச்சைக்காரன் தமது காலில் உள்ள புண்ணைக் காட்டி காட்டி பிச்சையெடுப்பது போன்று,இந்த நாட்டில் இன விரிசல்களை தக்க வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு சில அரசியல் கட்சிகள் துணை போகியுள்ளன.
காத்தாண்குடியில்,அழிஞ்சுப் பொத்தானையில் புலிகளினால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். எமது மக்கள் எந்த வித அநியாயத்தையும் எவருக்கும் செய்யவில்லை.எவரது சொத்துக்களையும் சூறையாடவில்லை.இந்த புலிகளின் பின்னால் அன்று மறைந்திருந்து அரசியல் செய்தவர்கள்,இன்று அவர்களது எச்சங்களாக நின்று மீண்டும் நாட்டில் பிளவையும்,இன மோதலையும் செய்ய ஆயத்தமாகின்றனர். இந்த நாட்டை பாதுகாத்து மக்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தி தந்த ஜனாதிபதி அவர்களை குற்றவாளியாக காட்ட தமிழ் கூட்டமைப்பு வாக்கு கேட்கின்றது.இவர்களுக்கு வாக்களிக்குமாறும் அவர்களுடன் சேர்ந்து கிழக்கின் ஆட்சியினை அமைக்கப்ப போவதாக ஸ்ரீ.ல.மு.கா.கூறுகின்றது என்றால்,அவர்களது அரசியல் செயற்பாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எமது மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமது உரிமைகளை அடகு வைத்து,சலுகைகளை பறிகொடுத்துவிட்டு சரணாகதியான அரசியலை எமது சமூகம் செய்ய முடியாது.அவ்வாறு சிந்திப்பது என்பது கூட எமக்கு பெரும் இழப்பை எற்படுத்தவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.எமக்குள்ள பிரச்சினையினை தீர்த்துக் கொள்ள எமது தரப்பு நியாயங்களை கேட்கும் அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும்.அது ஒட்டு மொத்த கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் தமது பணியினை நேர்மையாக செய்யும் ஒன்றாக இருக்க வேண்டும்.அதற்கான தகுதியினை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் எமது அணி வேட்பளார்கள் கொண்டிருக்கின்றார் என்றும் அமைச்சர் றிசாத் பதயுதீன் கூறினார்.
பிரதி அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புள்ளா உட்பட பலரும் உரையாற்றினர்
Ohh... adhuthaan palliyellam mooduraangalo... Radiola athaan solly, veettilirunthe tholachcholraaro???
ReplyDeleteஅமைச்சர் அவர்களே!
ReplyDeleteவடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த அநியாயங்கள் பற்றி தாங்கள் கூறும் விடயங்கள் அனைத்தும் உண்மை. ஆனால், நீங்கள் இம்மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முனைந்திருக்கின்றீர்கள்.
ஹகீம் மன்னிப்புக் கோரியதன் மூலம் முழு இஸ்லாமியர்கள் குறித்தும் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார் என்று சொல்லிருக்கின்றீர்கள். (ஹகீம் சொன்னது தப்பு என்று வைத்துக் கொண்டாலும்) தப்புச் செய்தவன் மன்னிப்புக் கோரக் கூடாது என்று உலகின் எந்த மதமும், நீதியும், திட்டங்களும் சொல்லவில்லையே! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் முஸ்லிம்களை வடக்கிலிருந்து துரத்திய புலிகளோ அல்லது நீங்கள் சொல்லும் புலிகளின் எச்ச சொச்சங்களோ இதுவரை முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோராமல் இருப்பது சரி என்று சொல்வது போல் தொனிக்கின்றதே.
அது சரி, பாங்கு விடயத்துக்கு வருவோம்.
அதான் ஏன் சொல்லப்படுகின்றது? தொழுகைக்கு அழைக்கத்தானே!
அழைப்பு எங்கிருந்து விடுக்கப்பட வேண்டும்? தொழும் இடத்திலிருந்துதானே!
வானொலியில் ஏன் அதான் சொல்ல வேண்டும்?
இம்முறை றமழானில் வானொலியில் அதான் சொல்வதற்கான அனுசரணைக் கட்டணமாக 39 இலட்ஷங்களை இலங்கை வானொலி சம்பாதித்திருக்கின்றது. இதில் பிறை எப்.எம். போன்ற பிராந்திய சேவைகளின் பாங்குச் சம்பாத்தியம் உள்ளடக்கப்படவில்லை.
இப்போது புரிகின்றதா? வானொலியில் நமது சமூகத்தின் பணச் செலவில்தான் பாங்கு சொல்லப்பட்டிருக்கின்றது. இதற்குப் போய் மகிந்த! மகிந்த! என்று வக்காலத்து வாங்குகின்றீர்களே வெட்கமா இல்லை?
வானொலியில் பாங்கு சொல்லிவிட்டு பள்ளிவாயல்களுக்குப் புபுட்டுப் போட்டு வீட்டில் தொழச் சொல்வதற்கான ஏர்கோலங்கள் நடக்கின்றனவோ!
அப்படி வந்தால் ”வீடுகளை மண்ணறைகளாக மாற்றிக் கொள்ளாதீர்கள்” என்ற நபி மொழியை கொண்டுவந்து வக்காலத்து வாங்குவீர்களோ!
எஜமான விசுவாசத்தை விட்டுவிட்டு மக்கள் பக்கம் நில்லுங்கள்.
”அரசறிய வீற்றிருந்த வாழ்வு விழும்” கவனம்.
நீங்கள் துடிப்புள்ள அரசியல்வாதி.. அது முஸ்லிம்களின் தன்மானத்தை பாதுகாப்பதற்கு பாவிக்கப்பட வேண்டும்.. காட்டிக்கொடுப்பதட்கு அல்ல... நிற்சயமாக காத்தான்குடி மக்கள் முஸ்லிம்களின் தன்மானத்தை காப்பற்றுவார்கள்.. அல்லாஹு அக்பர்
ReplyDelete