Header Ads



செப்டெம்பர் 3ம் திகதி தேசிய துக்க தினம் - அரசாங்கம் அறிவிப்பு

ராமான்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் அமரர் வந்தனைக்குரிய வேவல்தெனிய மேதாலங்கார தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் செப்டெம்பர் 3ம் திகதியை தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் அன்றைய தினம் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
103 வயதான மகாநாயக்க தேரரின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையிலிருந்து கம்பஹா,மீரிகம பிரிவேனாவிற்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளதுடன் எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மீரிகம தேசிய பாடசாலை மைதானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம் பெறவுள்ளன.

1 comment:

  1. வந்தனைக்குரிய என்கிற வார்த்தை என்னவென்று தெரியவில்லை இருப்பினும் இப்படியானவர்களுக்கு பொதுவாக பத்திரிகைகள் பாவிக்கும் வார்த்தையை தவிர்த்து இஸ்லாமிய வாசகர்களின் வசைகளை தவிர்து்துக்கொண்டீர்கள் என்பது எனது கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.