Header Ads



லிபியா கடலில் படகு மூழ்கி 30 பேர் மரணம்

 
ஒவ்வொரு வருடமும் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக இவர்கள் லிபியா கடல் பகுதிக்கு வந்து அங்கிருந்து இத்தாலி நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் எகிப்து நாட்டிலிருந்து 40 பேர் திருட்டுத்தனமாக ஐரோப்பா நோக்கி படகில் பயணம் மேற்கொண்டனர். 15 பேர் செல்லக்கூடிய மீன்பிடி படகில் 40 பேர் பயணம் செய்திருக்கின்றனர்.  நள்ளிரவில் லிபியா கடலுக்கு அருகே அவர்கள் சென்றபோது, அதிக எடை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படகில் பயணம் மேற்கொண்ட அனைவரும் கடலுக்குள் மூழ்கினர். அப்போது உயிர் தப்பிய சிலர் தங்களைக் காப்பாற்றும்படி அலறல் சப்தம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று உடல்கள் மட்டுமே கரை ஒதுங்கியுள்ளன. இதனால் படகில் பயணம் செய்த மற்ற அனைவருமே இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments

Powered by Blogger.