தாயிரதுஸ் ஸலபியீன் அமைப்பின் 3 நாள் வதிவிடப் பயிற்சி நெறி
எம். றிஸ்கான் முஸ்தீன்
பறகஹதெனிய தாருத் தௌஹீத் கலாபிடத்தின் பலைய மாணவர் அமைப்பான 'தாயிரதுஸ் ஸலபியீன்' தமது உறுப்பினர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டரை ஒன்றை தாருத் தௌஹீத் வளாகத்தில் நடாத்தியது.
தலைமைத்துப் பயிற்சியும் தொழில் வழிகாட்டளும் எனும் கருப்பொருளில் இடம் பெற்ற இந்நிகழ்சியில் 60 ற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தாயிராவின் தலைவரும் பேராதனைப் பல்கலையின் அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை தலைவருமான கலாநிதி நபீல் ஸலபி தலைமையில், தென்கிழக்கு பல்கலையின் அரபு மொழித் துரை தலைவர் கலாநிதி ஜஸீல் ஸலபி மற்றும் பேராதனை பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் யாசிர் ஸலபி ஆகியோர் மேற்படி பயிற்சியை நடத்தினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மேல்நீதிமன்றத்தின் மொழிபெயர்புத் துரை அதிகாரியான ஹுஸைன் ஸலபி பங்களிப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பேராதனை பல்கலையின் கலாநிதி மவ்ஜுத் உட்பட பல கல்விமான்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment