Header Ads



மன்னார் சம்பவம் மேலும் 26 பேரை கைதுசெய்ய நீதிவான் உத்தரவு

மன்னார் நீதிமன்றத்தின் மீது கடந்தமாதம் 19ம் நாள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 26 சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு மன்னார் நீதிவான் அ.யூட்சன் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவு பூர்த்தி செய்துள்ளது. இந்த அறிக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிவானுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் மூன்று முக்கிய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு மறைத்து விட்டதாக மன்னார்  சட்டத்தரணி சங்கத்தைச் சேர்ந்த சட்டவாளர் பெல்டானோ குற்றம்சாட்டியுள்ளார்.

இவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உறவினர் ஒருவரும், றிசாத் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவில் உள்ள சகாவல்துறை காவலர் ஒருவரும், மௌலவி ஒருவரும் அடங்கியுள்ளனர். மூன்று முக்கிய சந்தேகநபர்களை  குற்றப்புலனாய்வுப் பிரிவு தமது அறிக்கையில் குறிப்பிடாதது குறித்து காவல்துறைமா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. நாளை முழு மன்னார் முஸ்லிம்களையும் கைது செய்ய இந்த அநீதிபதி கட்டளையிட்டாலும், நமது சமூகம் இப்படியேதான் பேசாமல் இருக்கப் போகின்றது.

    போகிற போக்கைப் பார்த்தால்,"நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்" என்று கூறி, வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகும்வரை அனைத்து மன்னார் முஸ்லிம்களும் மன்னாரை விட்டு வெளியேற்றப் பட வேண்டும் என்று இந்த அநீதிபதி உத்தரவிடுவது நடந்தாலும் நடக்கும்.

    இதற்கு முழுக் காரணமும் நமது சமூகத்தில் உள்ள கல்வி, பண பலம் படைத்தவர்களே. யாழ் முஸ்லிமில் வந்து வீர அறிக்கை விடுவதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. நாமும் counter atttack இல் இறங்க வேண்டும். அப்பாவி மக்களை சுடும்படி, நீதிமன்றத்திட்கு வெளியே வந்து உத்தரவிட்ட மன்னார் அநீதிபதிக்கெதிரக இதுவரை ஒரு முறைப்பாடு கூட செய்யப் படவில்லை என்றால், நாம் இன்னுமும் என்னதான் செய்துகொண்டு இருக்கின்றோம்????

    ReplyDelete
  2. Neethi nilai naaddappada vendumaanaal intha valagku veru Oru nadu nilai Neethi pathiyaal visaarikkap pada vendum.

    ReplyDelete

Powered by Blogger.