Header Ads



ராஜகிரிய பள்ளிவாசலில் தொழுவதற்கு 25 ஆம் திகதி வரையே அனுமதி..!


V

பெரும்பான்மை இனத்தவர்களால் முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு தடைவிதித்து மூடப்பட்டிருந்த ராஜகிரிய ஒபேசேகரபுர ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் ௭திர்வரும் 25 ஆம் திகதி வரை சமயக் கடமைகளைத் தொடர்வதற்கு பொலிஸாரினால் அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக தீர்வொன்றினை ௭ட்டுவதற்கு இரு தரப்பினரும் வெலிக்கடை பொலிஸுக்கு அழைக்கப்பட்டிருந்தனர் பேச்சுவார்த்தையில் ஜாமி உத் தாருல் ஈமான் பள்ளிவாசல் பரிபாலன சபை நிர்வாக சபையும், பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டனர் பேச்சுவார்த்தைக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அநுரசேன நாயக்க தலைமை வகித்தார்.

நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சகல மதத்தவருக்கும் மத அனுட்டானங்களைக் கடைபிடிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

௭ன்றாலும் மத உரிமையை தடை செய்ய முடியாது ௭ன்பதை விளக்கிய பிரதி பொலிஸ் மா அதிபர் முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் அவர்களது மத கட மைகளுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாதென மத குருமார்களை வேண்டிக் கொண்டார். ௭திர் வரும் 25 ஆம் திகதி வரை பள்ளி வாசலில் சமய கடமை கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். 25 ஆம் திகதிக்குப் பின்பு பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவண ங்களை சமர்ப்பித்து கலாசார திணைக்களம் மூலம் சட்ட நடவடிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் முஸ்லிம் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

குறிப்பிட்ட பள்ளிவாசலுக்கு தொழுவத ற்கென வெளியிடங்களிலிருந்தும் மக்கள் வரு வதாக மதகுருமார் பொலிஸாரிடம் முறை யிட்டதைத் தொடர்ந்து வெளியிடங் களில் இருந்தும் தொழுகைக்காக வருவது நிறுத்தப்பட வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர் பள்ளிவாசல் பரிபாலன சபை க்கு உத்தரவிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மாநகரசபை மேயர் ஜானக ரணவக்க பள்ளிவாசலை மூடுவதற்கு அனுமதியளிக்க முடிய தென வும் முஸ்லிம்களின் சமய கடமைகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் தெரிவி த்து ள்ளார். ஒபேசேகரபுரவில் சுமார் 500 க்கும் மேற் பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின் றன.

இங்குள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலை மூடிவிட்டு அப்பகுதியிலுள்ளவர்கள் ராஜகிரியவிலுள்ள பள்ளிவாசலு க்கே செல்ல வேண்டுமென பௌத்த குரு மார் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகி றது

No comments

Powered by Blogger.