Header Ads



சீனாவில் 20 முஸ்லிம் போராளிகளுக்கு 15 வருட சிறை தண்டனை


சீனாவில் ஸின்ஷியாங் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு உகியாரை தனி நாடாக பிரித்து சுதந்திரம் வழங்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக இன்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இங்கு நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பங்களில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான்  உதவி புரிவதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் தீவிர செயல்களில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை  விசாரித்த கோர்ட்டு இவர்களுக்கு தலா 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.

No comments

Powered by Blogger.