Header Ads



றிசாத்திற்கு ஆதரவாக 20 சட்டத்தரணிகள் - ஒக்டோபர் 4 இல் மீண்டும் ஆஜராக உத்தரவு

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
 
மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்ட மேலதி நீரதவான் ரங்க திசாநாயக்க விடுத்த  அழைப்பாணையினை ஏற்றுக்   கொண்டு இன்று அமைச்சர் மன்னார் மஜிஸ்திரேட் நீதமன்றில் ஆஜரானார்.
 
கடந்த 17 ஆம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
 
இதனையடுத்து அமைச்சரை கைது செய்ய நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர றிசாத் பதியுதீன் இன்று சிரேஷ்ட சட்டதரணிகள் சகிதம் மன்றில் ஆஜரானார்.
 
சிரேஷ்ட சட்டதரணிகளான அனுர மெத்தேகொட, எம்.எம்.சுகைர், எம்.சஹீட், கஸ்ஸாலி ஹூசைன்,,ஹூனைஸ் பாருக், எஸ்.எல்.ஏ.அஸீஸ், திருமதி.ஆபிய்யா, எஸ்.பாஹிம், அஹமட் முனாஸ், ரோஷன், ஏ.எம்.றபீக், சிராஸ் நுார்தின், ஏ.லதீப் உட்பட 20 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் வாதங்களை முன்வைத்தனர். முறைப்பாட்ளர் சார்பில் நான்கு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்த நிலையில்  வரை வாதப் பிரதி வாதங்கள் மன்றில் இடம் பெற்றன.

இரு தரப்பு வாதப் பிரதி வாதங்களை கேட்டறி்ந்த நீதவான்,அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பினை மனுவை ஏற்றுக் கொண்டதுடன், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும்,10 ஆயிரம் ரூபா ரொக்கப்பினையிலும் செல்ல அனுமதியளித்தார்.

அதே வேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம் பெறும் எனவும் நீதவான் மன்றில் அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத்,உட்பட சட்டத்தரணிகள் உப்புக்குளம் பிரதேச மக்களை பள்ளிவாசில் சந்தித்து கலந்துரையாடினர்.
 







 

3 comments:

  1. அந்தெனி ஜூட் சன், தப்பு தாலம் பொடாதெ. nee புலி என்டால் நாங்கல் சிங்கம் என்டு தெரிஞ்சுக்கொ யுவர் ஆனர்.

    ReplyDelete
  2. ஜனாதிபதியார் புலி பயங்கரவாதிகளை ஒளிச்சுட்டோம் எண்டு சொல்றாரு, அப்ப இந்த அந்தனி ஜுட்சன் எப்பிடியப்பா தப்புனான்?
    இவன புடிச்சு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பனும்.

    ReplyDelete
  3. முஸ்லிம்களினதும், தமிழர்களினதும், சிங்களவர்களினதும் மீள் குடியேற்றத்தை முன்னெடுக்கும் அமைச்சரை எப்படியாவது உள்ளே தள்ள வேண்டும் என எதிர்பார்த்திருந்த நாசகார சக்திகளுக்கு எதிராக, அமைச்சருக்கும், மக்களுக்கும் இது ஒரு வெற்றிதான், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

    "நிச்சயமாக உண்மை வெல்லும், சத்தியம் நிலை நாட்டப்படும்" என்று சட்டத்தரணி எம் எம் சுஹைர் BBC க்கு தெரிவித்தார்.

    ReplyDelete

Powered by Blogger.