அரச ஊழியர்களின் கவனக்குறைவு - தபால்மூல 19.000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 19 ஆயிரத்திற்கு மேற்பட்டவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தலில் தாபல் மூலம் வாக்களிப்பதற்காக 1,20,080 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றுள் 19,292 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 1,00,788 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும், இதற்கமைய எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment