ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை - மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 416 மாணவர்கள்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 803 நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 416 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 தொடக்கம் நண்பகல் 12 மணிவரை பரீட்சை நடைபெறவுள்ளதுடன் பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகவும் தெளிவாக சுட்டெண்ணை வினாத்தாளில் குறிப்பிட வேண்டும் என திணைணக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment