ஆப்கானிஸ்தானில் இசை விருந்தில் பங்கேற்ற 17 பேர் தலை துண்டித்து படுகொலை
ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், இசையுடன் கூடிய, விருந்தில் பங்கேற்ற, இரண்டு பெண்கள் உட்பட 17 பேரை, தலிபான்கள், தலையைத் துண்டித்து கொன்றனர்.
ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் வசிக்கும், பழங்குடி இனத்தவர் பாரம்பரிய நடனமாடுவது வழக்கம். பொது இடத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து ஆடும் இந்த நடனத்துக்கு, தலிபான் பயங்கரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1996 முதல் 2001 வரை ஆப்கனில், தலிபான்கள் ஆட்சி நடந்தபோது, இவ்வகை நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதிபராக ஹமீது கர்சாய் பொறுப்பேற்றதும், மீண்டும் இந்த நடனங்கள் பரபலமாயின. இருப்பனும், தலிபான்கள் தொடர்ந்து, இந்த நடனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஹெல்மண்ட் மாகாணத்தில், தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த, முசா குவாலா மற்றும் கஜகி மாவட்டங்களின் எல்லையில் உள்ள, ஜமிந்தாவர் கிராமத்தில், சமீபத்தில் பழங்குடியினர் இசையுடன் கூடிய, விருந்து நடத்தியுள்ளனர். ஆத்திரமடைந்த தலிபான்கள், விருந்தில் பங்கேற்று நடனமாடிய இரண்டு பெண்கள் உட்பட, 17 பேரின் தலையைத் துண்டித்து கொலை செய்தனர். “இது தலிபான்கள் வேலையாகத் தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என, மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தாவூத் அகமது தெரிவித்தார்.
ஏற்கனவே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மற்றும் ஆப்கன் படைகளுக்கு, பழங்குடியினர் உளவாளிகளாக இருப்பதாக குற்றம் சாட்டி, அவர்களை தலிபான்கள் தலையைத் துண்டித்து கொன்று வரும் நிலையில், இசையுடன் கூடிய விருந்து நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களை கொடூரமாகக் கொன்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கொன்டு போட்டு, பலிய தலிபான் மெலே பொட முடியும். யாருக்கு உன்மை தெரியும்?
ReplyDeleteNOT ONLY MUSIC OR DANCE MOST ADULT CATCH GOOD LOOKING YOUNG BOY TO DANCE LIKE STRIPPING THEN LATER THEY DO GROUP RAPE THAT BOY AND SAME FOR FEMALE GIRLS THIS WAS ALREADY WARNED BY TALIBAN ALSO MANY MORE BARS AND UNDER COVERED CINEMA FOR DIRTY PORNO SHOW THIS WAS ALSO ONE OF THE TABOOS
ReplyDelete