Header Ads



வாக்காளர் பதிவு 15 ஆம் திகதிக்கு நீடிப்பு - முஸ்லிம்களையும் கவனம் செலுத்த கோரிக்கை


யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 15 திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். இந்த வாக்காளர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் பூரண ஒத்தழைப்பு இல்லாத காரணத்தாலேயே கால நீடிப்பு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் பதிவு நடவடிக்கையில் பொதுமக்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் யாழ். தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாக்காளராக பதிவதில் முழுக்கவனம் செலுத்த வேண்டுமென கிராம சேவகர் ஜினூஸ் எமது இணைத்திடம் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளவர்கள் இதுதொடர்பில் உடனடிக்கவனம் செலுத்த வேண்டுமெனவும், அவர்கள் இதுதொடர்பில் தமது அலுவலகம் வந்து மேலதிக  விளக்க பெறமுடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.