14.000 கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை தயாரித்தது சீனா
கண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய தலைமுறை ஏவுகணையை விரைவில் ஏவும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. டோங்பெங்-41 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, பல நியூக்ளியர் குண்டுகளை சுமந்து 14000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தனது இலக்கை தாக்கும் என்று கூறப்படுகிறது.
பெண் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவுடன் சென்ற மாதம் இதற்குரிய சோதனையை சீனா நடத்தியுள்ளது என்று அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை 10 நியூக்ளியர் குண்டுகளை தாங்கி செல்லக்கூடியது ஆகும்.
சீனா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து இச்செய்தியை சீனா வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.1 1

Post a Comment