வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவித்தொகை
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்குரிய பொதுசன மாதாந்த உதவிதொகை வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாதங்களுக்கான உதவித் தொகை இதன்போது வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் வேப்பமடு, பாலாவி, நுரைச்சோலை, இஸ்மாயில்புரம், மதுரங்குளி, ஆலங்குடா பகுதிகளிலுள்ள நிலையங்கள் மூலமாக இந்த உதவித் தொகை விநியோகிக்கப்படவுள்ளது.
15 ஆம் திகதி புத்தளம் தில்லையடியிலும், 16 ஆம் திகதி அனுராதபுரத்திலும் உள்ள நிலையங்கள் ஊடாக இடம்பெயர்ந்தவர்களுக்கான ஆறு மாதங்களுக்குரிய உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித் தொகை மூலம் வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம், மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற சுமார் 2000 பேர் நன்மையடைவார்கள் என பிராந்திய ஆணையாளர் கூறினார்.
Post a Comment