Header Ads



நாட்டில் வீடற்றவர்கள்களுக்கு 12 இலட்சம் வீடுகளே தேவையாக உள்ளதாக கணக்கெடுப்பு

அஸ்ரப் ஏ சமத்

சஜித் பிரமதாச அண்மையில் என் மீது பின்வரும் குற்றச்சாட்டை ஊடகங்களில் சுமத்தி வருகின்றார். அவருடைய தந்தை ஆர் பிரேமதாச அவர்களால்  நிர்மாணித்த வீடமைப்புத்திட்டங்களில் உள்ள ஞாபகக் கல்லை நீக்குவதாகவும் அக்கல்லுக்குப் பதிலாக எனது பெயர்கொண்ட ஞாபக்கற்களை பதிப்பதாகவும் கூறியுள்ளார்.

என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

கொழும்பு மாவட்டத்தில் கடுவளை பிரதேசத்தில் வீடற்ற 515 குடும்பங்களுக்கு 100 மில்லியன் ருபாவை வீடமைப்புக் கடன் நேற்று(27) பத்தரமுல்லையில் உள்ள ஜனகலா கேந்திர நிலையத்தில் வைத்து அமைச்சர் விமல் வீரவன்சவினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஆனால் 60-70ம் ஆண்டுப் காலப்பகுதியில்தான் கொழும்பு நகரில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை அமுல்படுத்தியவர். அன்று வீடமைப்புக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பீட்டர்கெணமன்.  அவரின் காலத்திலேயே மாளிகவத்தை, மொரட்டுவை சொய்சாபுற, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை ஆரம்பித்தவர். தற்பொழுதும் கூட அவர் நாட்டிய ஞாபக்கல் அந்தந்த தொடர் மாடிவீட்டுத் திட்டங்களில் பதிக்கப்பட்டுள்ளன. அவரின் காலத்திலேயே தேசிய வீடமைப்பு அதிகார சபையை ஸ்தாபிக்கப்பட்டது. இவ் அதிகார சபைக் தலைமைக்காரியாலயக் கட்டிடத்தைக் கூட நிர்மாணித்தவரும் பீட்டர்கெனமனே.  1977 ஆண்டுகளில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச இத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்தார். இதுதான் உண்மை. இவரின் காலத்தில்தான் கம்உதாவ 1இலட்சம் 10 இலட்சம் 15 இலட்சம் என வீடமைப்புத் திட்டம் முன்எடுக்கப்பட்டது. இத்திட்டத்தினை இன்றுவரை முன்எடுத்திருந்தால் இந்த நாட்டில் ஒரு வீட்டுக்கு 4 பேர் என்ற அடிப்படையில் 1கோடி 4இலட்சம் மக்கள் இவ் வீடுகளில் வாழ்ந்து வரவேண்டும்.

இதனை விட்டு ஆர் பிரமதாச நிர்மாணித்த வீடுகளுக்கு விமல் வீரவன்ச வர்ணம் தீட்டிவிட்டு  பிரமதாசவின் நாட்டிய  ஞாபக் கற்களை நீக்கிவிட்டு விமல்வீரவன்சவையும் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரைச் சூட்டுவதாக சசித் பிரேமதாச எண்மீது பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார். அவருடைய தந்தை நாட்டிய கற்களைக்கூட அழகுபடுத்தி வர்ணம் தீட்டி இருக்கின்றேன். 30 வருடங்கள் பழமைவாய்ந்த தொடர்மாடி வீடுகளுக்கு அரசின் நிதி உதவியுடன் ஐனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வாழும் மக்கள் இதனை வரவேற்கின்றனர்.

இத்திட்டத்தினை செய்யவேண்டாம். கொழும்பு மாநகரப்பகுதிகள் மீண்டும் சேரிகளாகவும் போதைவஸ்த்து  கொரியா பாதாளகோஸ்ட்டியினர் வாழக்கூடிய இடம் போன்று காட்சியளிப்பதையே ஐ.தே.கட்சியும் அதன் தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
 
இந்த நாட்டில் வீடற்றவர்கள்களுக்கு 12  இலட்சம் வீடுகளே தேவையாக உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் 7 இலட்சம் வீடுகளே தேவையாக உள்ளன.   இந்த நாட்டில்  நிரந்தரமாக 52 இலட்சம் வீடுகள் உள்ளன. ஓலைக்குடிசைகள், மற்றும் பலகை  வீடுகளாக 12 இலட்சம் வீடுகள் உள்ளன. நிரந்தர கூரை உள்ள வீடுகள் 44 இலட்சமாகும். அரைவாசிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 574,036 வீடுகள் உள்ளன.
 


 

No comments

Powered by Blogger.