முஸ்லிம்கள் அதிகமுள்ள அம்பாறையில் 115 தொன்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பாம்..!
SN
அம்பாறை நீலகிரி தூபியை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 115 தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தூபியை சூழவுள்ள மூன்று கிலோமீற்றர் சுற்றுவட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களத்தின் விசேட அகழ்வு மற்றும் அவசர ஆய்வுப் பிரிவின் தலைவர் ரி.எம்.சி.பண்டார கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் புராதன விஹாரைகளின் எச்சங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.
இதனைத் தவிர அநுராதபுரம் இராசதானிக்கு சொந்தமான ஏழு கல்வெட்டுக்களும் குறித்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தொல்பொருள் சான்றுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
THIS IS DANGEROUS START TO CALL FULL AMPARA AS PUNIDA BOOMI.
ReplyDeleteஅப்ப ஆதம் (அலை) வந்திறங்கியதாக சொல்லப்படும் இலங்கை இஸ்லாமியர்களுடையது. அப்படடியா சகோதரர்? இந்த உலகம் அல்லாஹ்வினுடையது யாருக்கு அதனை கொடுப்பது என்பதை தீர்மானிப்பது அல்லாஹ் ஒருவனே ஆக அவனுக்கு கட்டுப்பட்டு ரசூல் (ஸல்) வாழ்கையை எமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக்கொள்ளும் போது நாம் தான் இந்த உலகை ஆளப்போகிறோம்.
ReplyDelete