ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், பாயிஸ் ஆகியோர் LLM பட்டம் பெற்றனர் (படங்கள்)
-அஸ்லம் எஸ்.மௌலானா-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிஸாம் காரியப்பர், மு.கா. சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகிய மூவரும் இன்று (31/07/2012) சட்டத்துறையில் சட்ட முதுமாணி (LLM) பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கற்கை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை பல்கலை மண்டபத்தில் நடைபெற்ற போதே இம்மூவருக்கும் LLM பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறையில் சுமார் எண்பது பேர் சட்ட முதுமாணிப் பட்டத்தையும் மருத்துவத் துறையில் சுமார் நூறு பேர் வைத்திய முதுமாணிப் பட்டத்தையும் வேறு சிலர் தத்தம் துறைசார் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிஸாம் காரியப்பர், மு.கா. சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகிய மூவரும் கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கற்கை நிறுவனத்தில் சட்ட முதுமாணி பாட நெறியைப் பூர்த்தி செய்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட முதுமாணி பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். இதன் பேரிலேயே இவர்கள் LLM பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர்.
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 1999 ஆம் ஆண்டு சட்டத்துறையில் LLM பட்டத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டம் மன்னார் விஷயத்தில் தலையிட்டு மன்னார் நீதிமன்றதுகெதிராக உயர் நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெறபாவிக்கபடுவதுடன் நாடலாவிய ரீதியில் சட்டபடி முஸ்லிம்மாணவிகளின் கலாசார உடை அணிந்து கல்வி பயிலும் உரிமை மறுக்கபடும் அந்நிய பாடசாலைகள்,தாதியர் பயிட்சிகல்லூரிளின் தான்ரோன்றிதனமான போக்குகிட்கு வழக்கு தொடுத்து கடிவாளம் சட்டத்தை பயன் படுத்தி இடுவது போன்ற சமூகபணிக்கி உடனடியாக பாவிக்கபட்டால் அது முஸ்லிம் சமுதாயதிட்கு பிரயோஜனமான பட்டமாக இருக்கும் இல்லையெனில் தனி மனிதனைதான் வாழவைக்கும் அப்படி தமி மனிதனை மட்டும் வாழவைக்கும் பட்டதால் முஸ்லிம் என்பதட்காக கூட நாம் பெருமைபட ஒன்றும் இல்லை
ReplyDeleteஇவர்களின் தனிப்பட்ட அடைவுகளால் சமூகத்திற்கு என்ன பயன்?
ReplyDeleteமன்னாரில் அநீதி தலைவிரித்தாடுகின்றது, முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அமைச்சருக்கு எதிராக அநியாயமாக வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது, அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளும்படி அநீதிபதி பகிரங்கமாக உத்தரவு போடுகின்றார், இவர்கள் எல்லாம் இதுவரை என்ன செய்தார்கள்???
Oh rishards people here blaming others. when colombo university gave doctorate to Mahinda these people shut their mouth and congratulated mahinda for his achivement
ReplyDelete