முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கே முக்கியத்துவம் - ஹஸன் அலி எம்.பி.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தியே முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானங்களை மேற்கொள்ளுமென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் எம்.பி. தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலம் மேலும் தகவல் தருகையில்,
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமாயின் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் தயாரா என்பது எமக்குத் தெரியாது. எனினும் முஸ்லிம் சமூகமானது. நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பின்னரே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமென விரும்புகிறது.
முஸ்லிம் சமூகத்தின் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ், அந்த சமூகத்தின் அபிப்பிராயங்களையும் கவனத்திற்கு எடுக்கும். கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சர் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்கேற்றவகையில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானங்களை மேற்கொள்ளுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment