தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களோடு இருக்கின்றார்கள் என காட்ட அரசு முனைகின்றது
TM
தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களோடு இருக்கின்றார்கள் என காட்ட அரசு முனைகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"கிழக்கு மாகாண சபையில் இரு சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களின் வாழ்வியல் பூமியில் தங்களது நிலங்களை பாதுகாத்து கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை தேர்தலில் களம் இறங்கியுள்ளன. முஸ்லிம் மக்கள் தனித்துவமான இனம். அதேபோல் தமிழ் மக்களும் தனித்துவமான இனம். இந்த இரு இனங்களின் தனித்துவ உரிமைகள் பேணப்படுவதற்காக முதலமைச்சர் பதவி பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களின் தேசியம் காப்பற்றப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை நேசிப்பவர்களாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறக்கப்பட்ட மனிதர். ஆவரை கட்டாயம் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் அரசு வெல்வதற்காக தனது அரச இயந்திரத்தை முழு வீச்சுடன் நகர்த்திக் கொண்டு இருக்கின்றது.
கிழக்கு மாகாண சபையில் வெல்வதன் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களோடு இருக்கின்றார்கள் என அரசு வெளிநாடுகளுக்கு காட்ட முனைகின்றது. கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதன் மூலம் எமது மண்ணை பாதுகாத்துக் கொள்ள முடியும். மண்ணை பாதுகாப்பதன் மூலம் எமது தேசியத்தை நாங்கள் ஒன்றிணைந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.
உங்கா வெத்து வேட்டு உணர்சிகளுக்கு அடைமையாகும் நிலையில் இல்லை மக்கள் 60 வருடமாக உங்கள் பின்னால் இழுபட்டு மக்கள் எதை கண்டார்கள் இழப்புகளை தவிர இனியாவது வாழ வேண்டுமென்பதே மக்கள் எதிர்பார்ப்பு ஆக மக்கள் மாற்றத்தையும் உங்களுக்கான மாற்றீடையும் விரும்புகிறார்கள்
ReplyDelete