கால்நடை தொழில் நுட்பப் பூங்காவும், கால் நடை அபிவிருத்தி அறிவகமும் (படங்கள்)
மொஹமட் ஹபீஸ்
விவசாய அமைச்சின் காலநடை அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இன்று பால் உற்பத்தியில் போதியளவு மட்டத்தை அடைந்துள்ளதுடன் ஏனைய கால்நடைகளைப் பொருத்தவரையிலும் தன்னிறைவை அடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளியு.கே.டி. சில்வா தெரிவித்தார்.
(13.7.2012) கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றிற்கான தேசிய கேள்வியை நிறைவு செய்ய தேசிய உற்பத்தி போதிளவாக இருப்பதாகவும், இதற்குப் பிரதான காரணங்களாக விவசாய அமைச்சின் விலங்கு அபிவிருத்தி ஆராய்ச்சி மற்றும் வடக்கு, கிழக்கு சார்ந்த பகுதிகளில் யுத்த முடிவையடுத்து ஏற்பட்டுள்ள விவசாய நடவடிக்கைகளின் முன் எடுப்பு போன்ற காரணங்களாகுமென்று கூறினார்.
எனவே புதிய தலைமுறையினருக்குத் தேவையான வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு கண்டி கெட்டமபையில் அமைச்சர் ஆருமுகன் தொண்டமானினால் இரண்டு வகையான நிலையங்கள் திறந்து வைக்கப்ப்டடதாகவும் அதில் ஒன்று கால்நடை தொழில் நுட்பப் பூங்காவும் மற்றது கால் நடை அபிவிருத்தி அறிவகமும் ஆகும் என்றார்.
இவற்றை விரும்பியோர் பர்வையிடலாம். குறைந்த செலவில் குறைந்த வளங்களுடன் கூடிய பயனைப் பெறக் கூடிய பல்வேறு யுத்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் செயன் முறை ரீதியாகவும் நடைமுறைப் படுத்தப்படும் சந்தர்ப்பங்களை அவை இரண்டும் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சாதாரணமாக 10 பர்ச்சஸ் நிலத்தில் கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை, புல் வளர்ப்பு (கழிவு முகாமை) உயிரியல் வாயு தயாரிப்பு, பசளை தயாரிப்பு போன்ற பல அம்சங்கள் தொடர்பான செயன்முறை வழிகாட்டல்கள் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அவை செய்தியாளர்களுக்கு நேரடியாகவும் ஒலி,ஒளி ஊடகங்கள் மூலமும் காண்பிக்கப்பட்டன. பொது மக்களுக்கும் இதே வசதிகளை செய்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தாhர்.
பேராதனைப் பல்கழைக்கழகம்,குண்டசாலை விவசாயப் பாடசாலை போன்ற பலவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கும் இவை பாரியளவு துணை புரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment