மு.கா. நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறது - கிழக்கு நோக்கி முக்கியஸதர்கள் விரைவு
கிழக்கு மாகாண சபைக்கு தனது மரச்சின்னத்தில் போட்டியிடவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாளை வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக மு.கா. உயர் வட்டாரங்கள் எமது இணையத்திடம் தெரிவித்தன.
தற்போது கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாது தனித்துப் போட்டியிடுவதென முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள தீர்மானம் கட்சி முக்கியஸ்தர்களிடையேயும், ஆதரவாளர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேவேளை நாளை திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பொருட்டு கட்சி முக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விரையுவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment