யாழ்ப்பாண மாநகர உறுப்பினராக பாஸா முகைதீன் சரபுல் அனாம் நியமனம் (படங்கள்)
பா.சிகான்
யாழ் மாநகர சபை உறுப்பினராக பாஸா முகைதீன் சரபுல் அனாம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2009 ஆண்டு நடைபெற்ற மாநகர சபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டிருந்தார்.
தற்போது மாநகர சபையில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பதிலாக இவரை டக்ளஸ் தேவானந்தா நியமித்துள்ளார். இவர் யாழ் முகைதீன் ஜும்மா பள்ளியின் செயலாளரும், கிளிநொச்சி முகையதீன் பள்ளியின் தலைவருமாவார்.
1982 ஆம் ஆண்டு யாழ் மாநகர சபை உறுப்பினராகவிருந்த மர்ஹீம் பாஸா முகைதீன் கொமெனி யின் மகனாவார்.
இவர் தனது மாநகர கன்னியுரையை திங்கட்கிழமை(30.07.2012)ஆற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் மூலம் நல்லது மட்டுமே நடக்கும் என்றால், நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteயாழ் மாநகர சபையில் தற்போதைய முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
சொனகதேருவின் நிலைமை எப்படி உயரப் போகின்றது என்பதுதான் கேள்வி?
உடைந்து குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகள், மின்விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தாலும் கூட
இன்னும் இருட்டில் கிடக்கும் சில உள் வீதிகள், பொது குடிநீர் விநியோகத் திட்டத்தின் தேவை, சீரற்ற நிலையில் இருக்கும்
கழிவு நீர் வடிகால்கள், நுளம்புப் பெருக்கம், குப்பை கூளங்கள் அகற்றப் படாமல், இடிபாடுகளில் இருக்கும் வீடுகள்
குப்பை மேடுகளாக மாற்றப் பட்டுள்ளமை..... இவற்றில் மாற்றம் தேவை.
அடுத்த தேர்தல் வருமுன்னராவது ஏதாவது மாற்றம் நடக்கின்றதா என்று பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.
முஸ்லிம் ஒருவரை நியமித்தது குறித்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்கும்,EPDP கட்சிக்கும் நன்றிகள்.
ஏற்கனவே வெளிநாடு சென்ற முஸ்லிம் ஒருவரின் இடத்துக்கே இந்த ஷரப் நியமிக்கப் பட்டுள்ளார். வெளிநாடு சென்ற அஜ்மைன் அசிகர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலேயே போட்டியிட்டவர்.
ReplyDelete1994 ஆம் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ் முஸ்லிம் ஒருவர் epdp சார்பில் போட்டியிட்டு தெரிவஹியிருந்தார். epdp யின் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக இருந்த முஸ்லிம் நபாரை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டதால் பாராளுமன்றம் செல்ல முன்பே அவர் இராஜினாமா செய்து விட்டார். இதனால் டக்ளசுக்கு முஸ்லிம்களிடம் இருந்த நன்மதிப்பு குறைந்து விட்டது.
இனிமேலாவாது டக்லஸ் முஸ்லிம்களை மீளக் குடியேற்றும் விடயத்தில் உள்ள தடைகளை உடைக்கட்டும். ஷரப் மூலமாக அவர் முஸ்லிம்களுக்கு செய்யப் போகும் சேவையிலே வட மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு விழும் முஸ்லிம் வாக்குகள் தங்கியுள்ளன.
ஷரப் உக்கு எமது வாழ்த்துக்கள்.
தவறுக்கு வருந்துகின்றேன், சுட்டிக் காட்டிய சகோதரர் Mohamed Irfan இற்கு நன்றிகள். அப்படியானால் யாழ் மாநகர சபையில் முஸ்லிம் அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் ஐந்தாகவே இருக்கப் போகின்றது.
ReplyDelete1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ் முஸ்லிம்கள் பல்வேறு வகையிலும் ஏமாற்றப்பட்டனர். புத்தளத்தைச் சேர்ந்த டாக்டர் இல்லியாஸ் என்பவர் வாக்கு மோசடி மூலம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இக்பால் என்பவரை ஏமாற்றி யாழ்ப்பாண முஸ்லிம்களின் பெயரால் பாராளுமன்றம் சென்றார்.(தற்பொழுது ஓய்வூதியமும் பெறுகின்றார்) யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்வில் குறிப்பிடத் தக்க எந்த மாற்றமும் இவரால் ஏற்படவில்லை.
தற்பொழுது டாக்டர் இல்லியாஸ் வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை நாசுக்காக வெளியிடும் ஒருவராகவும்,
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறித்து தப்பபிப்பிராயத்தை வளர்க்கும் ஒருவராகவும், தனித் தமிழர் தாயகம் என்ற பெயரில் புலிகளின் கொள்கைகளுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் ஒருவராகவும் காணப்படுகின்றார்.
அல்லாஹ் யாவற்றுக்கும் போதுமானவன்.