Header Ads



கிழக்கு தேர்தலில் மு.கா., தமிழ் கூட்டமைப்பை இணைக்க முயற்சிக்கவில்லை - நோர்வே

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கூட்டணியை உருவாக்க நோர்வே மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வெளியான செய்திகளை நோர்வே நிராகரித்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளையும் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட வைக்க, நோர்வே முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் நேற்று முன்தினம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூ
ட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கு நோர்வே எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், இன்னொரு நாட்டின் தேர்தல் அல்லது உட்கட்சி அரசியலில் நோர்வே தலையிடுவதில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.