பீரங்கிகள், குண்டுகளுடன் சமூகத்தை எதிர்கொள்பவர்களுக்கு அழிவு ஏற்படும்
சிரியாவில் நடக்கும் கூட்டுப் படுகொலைகளும், சமூக இன அழித்தொழிப்புகளும் மனிதநேயத்திற்கெதிரான அடாவடித்தனங்களும் அணையப் போகும் ஒரு ஆட்சியின் தீ ஜூவாலை என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.
கோஜா அலி நகரத்தில் நடந்த கட்சி மாநாட்டில் உரையாற்றினார் எர்துகான். அப்பொழுது அவர் தனது உரையில், ‘தங்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக பீரங்கிகள் மற்றும் குண்டுகளுடன் சமூகத்தை எதிர்கொள்பவர்களுக்கு அவர்களின் கையினாலேயே அழிவு ஏற்படும். சொந்த குடிமக்களை அடக்கி ஒடுக்கும் ஆட்சி கூடுதல் காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது’ என்று எர்துகான் குறிப்பிட்டார்.
Post a Comment