Header Ads



சவூதியில் புத்தரை வழிபட்டவருக்கு கழுத்து வெட்டப்பட்டால் இலங்கையில்...! (படம்)


AD

சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்புவதை இலங்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதிக்குச் செல்லும் இலங்கை பணியாளர்கள் துன்புறுத்தல்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் புத்தர் சிலை வழிபாட்டில் ஈடுபட்ட துங்கசிறி என்ற இலங்கை பணியாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் இன்று (11) கொழும்பு சவுதி அரேபிய தூதுரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,

"சவுதியில் புத்தர் சிலை வழிபாட்டில் ஈடுபட்ட துங்கசிறி கைது செய்யப்பட்டுள்ளார். துங்கசிறியின் குடும்பத்திற்கு மத வழிபாட்டிற்கு புத்தர் சிலை முன் விளக்கு ஏற்றியதால் கைது செய்யப்பட்டார் என அறிக்கை மூலம் கூறிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தற்போது தாயத்து வைத்திருந்ததால் தான் கைது செய்யப்பட்டதாக பொய் கூறுகிறது.

இலங்கையில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குச் சென்ற பிக்குகள் மதிக்கப்படவில்லை. தூதரக அதிகாரிகளால் பிடித்து தள்ளப்பட்டனர். இங்கே இப்படி என்றால் சவுதியில் உள்ள துங்கசிறிக்கு என்ன நடக்கும்?

இங்கு எந்த மத, அரசியல் பிரிவினையும் இல்லை. ரிசானா நபீக்கிற்காகவும் ஆரியவதிக்காகவும் நாம் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

நாளை அல்லது நாளை மறுதினம் துங்கசிறியின் கழுத்து வெட்டப்பட்டால் யார் பொறுப்பு கூறுவது. இதற்கு முன்னரும் இலங்கையர்கள் நால்வர் ரியாத்தில் தலை வெட்டப்பட்டுள்ளனர். துங்கசிறிக்கு அவ்வாறு நடந்தால் இங்கு பாரிய பிரச்சினை ஏற்படும். இது அச்சுறுத்தல் அல்ல.

சவுதியில் வேலை செய்யும் பௌத்தர் ஒருவருக்கு புத்தர் சிலையை வழிபட முடியாதென்றால் இன்று இலங்கையில் எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன. அங்கு சென்று முஸ்லிம்கள் அல்லா என வழிபடுகின்றனர். அவர்களை யாரும் கைது செய்கிறார்களா?

சவுதியில் இலங்கையர்கள் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் அங்கு துன்புறுத்தப்படுகின்றனர், கழுத்து வெட்டப்படுகின்றனர், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர், கசையடி வாங்குகின்றனர் இதனை பார்த்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்கிறது?

துங்கசிறியை நாட்டுக்கு அழைத்துவரும் வரை போராட்டத்தை தொடர்ந்து வடத்துவோம்" இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.