மாகாண சபை வேட்பாளர்களுக்கு பொலிஸ் றிப்போர்ட் அவசியம் - மஹிந்த ராஜபக்ஸ
வட மத்திய, சப்பிரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களது பொலிஸ் அறிக்கையைக் கோருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் அறிக்கைகளின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் ஊழல், மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்தால் அவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது.
தேர்தலில் போட்டியிட முன் வருபவர்கள் தமது சொத்து விவரங்களை வெளியிடுவதில்லை. மேலும் எதிர்க் கட்சிப் பட்டியலில் போட்டியிட்டு தம்மீதுள்ள ஊழல், மோசடி மற்றும் குற்றச் செயல்களிலிருந்து தப்புவதற்காக அரசு பக்கம் தாவும் நிலைமை அதிகரித்துள்ளது. இவற்றைத் தடுக்கவே இப்புதிய நடை முறை பின்பற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment