மியன்மார் முஸ்லிம்கள் எமக்கு வேண்டாம் - பங்களாதேஷ் அரசாங்கத்தின் புலம்பல்
முஸ்லிம் அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் நாட்டிடம், வங்கதேச அரசு வற்புறுத்தியுள்ளது. வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம், முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே, கலவரம் மூண்டது. ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த, 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், மியான்மரில் குடியுரிமை கேட்டு, போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு, குடியுரிமை அளிக்க, மியான்மர் அரசு மறுத்து விட்டது.
இதற்கிடையே, முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, கடந்த மாதம், பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பதற்றமான சூழல் இங்கு நிலவியதால், பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் ஊடுருவினர்.
நப் என்ற ஆற்றின் மூலமும், எல்லைப் பகுதி வழியாகவும் பலர் ஊடுருவியதால், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், அகதிகளை விரட்டியடித்தனர். இதற்கு, ஐ.நா., அகதிகள் கமிஷனரகம் கண்டனம் தெரிவித்தது. வங்கதேசத்தில், ஏராளமான அகதிகள் உள்ளதால், அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, வெளியுறவு அமைச்சர் திபுமோனி, மியான்மர் தூதரிடம் வற்புறுத்தியுள்ளார்.
Post a Comment