Header Ads



மு.கா. தேர்தல் வேட்புமனுப் பத்திரத்தை பெற்றது - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.கா. அரசுடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்ற சர்ச்சைக்கு மத்தியில் நேற்று அக்கட்சி, வேட்புமனு விண்ணப்பங்களுக்கான பத்திரங்களை தேர்தல்கள் செயலகத்தில் பெற்றுக்கொண்டுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மு.காவின் செயலாளர் நாயகம் ஹசன் அலி நேற்று தேர்தல்கள் செயலகம் சென்று வேட்புமனுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்த மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அரசுடன் மு.கா. செய்துகொள்ள உத்தேசித்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரதியொன்றைக் கையளித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பிரதியைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சுசில் இது தொடர்பாகப் பரிசீலித்து உரிய பதில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் அரசின் பதில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்துக்கு முன்னர் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது என அரச உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

அரசின் குறித்த பதிலே நாளை இடம்பெறவுள்ள மு.காவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. SLMC அரசுடன்தான் சேர்ந்து இம்முறை களத்தில் இறங்கும். இது 100 % உறுதி. 19 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு தனித்து கேட்குற மாதிரி ஏன் சார் இப்படி ஒரு மக்களுக்கு பம்மாத்து..... அரசுடன் டிமாண்ட் காட்ற மாதி மக்களுக்கு இப்படி ஒரு நடிப்பு. பெரும் அதிர்வு ஏற்பட இதில் ஒண்டும் இல்ல சார்.....

    ReplyDelete
  2. ஹக்கீம் காக்காட தில்லு முள்ளு இன்னம் உங்களுக்கு விளன்கேளே ? என்ன பர பரப்பு சுனாமியா வருகுது

    ReplyDelete

Powered by Blogger.